மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்; வந்தே பாரத் ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம்; 'சூப்பர்' அறிவிப்பு!

First Published | Jan 16, 2025, 10:59 AM IST

மத்திய அரசு ஊழியர்கள் LTC திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்களில் கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

Vande Bharat Train

வந்தே பாரத் ரயில்களில் இலவசம் 

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதில் ஒன்று தான் LTC எனப்படும் விடுமுறை பயணச் சலுகை திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் இப்போது வந்தே பாரத் ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) சூப்பர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Vande Bharat Train Travel

விடுமுறை பயணச் சலுகை

இது தொடர்பாக DoPT வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசு ஊழியர்கள் விடுமுறை பயணச் சலுகை திட்டத்தின் கீழ்  (LTC) இப்போது ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் கட்டணமின்றி பயணம் செய்கின்றனர்.

இனிமேல் தேஜாஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்க‌ப்படுவார்கள். செலவுத் துறையுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

Tap to resize

What is the LTC

LTC என்றால் என்ன?

விடுமுறை பயணச் சலுகை (LTC) என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சுற்றுலா சலுகை ஆகும். இந்த திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஊழியர்கள் நான்கு ஆண்டு கால இடைவெளியில் தங்கள் சொந்த ஊருக்கு அல்லது இந்தியாவிற்குள் உள்ள எந்த இடத்திற்கும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடியும்.

இந்த சுற்றுலாவின்போது, ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ, தேஜாஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மத்திய அரசு ஊழியர்கள் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும்.

Central Government Employees

இரண்டு வாய்ப்புகள்

அவர்களின் கட்டணத்தை மத்திய அரசே செலுத்தி விடும். மேலும் இந்த சுற்றுலாவுக்கு அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். இந்த LTC திட்டத்தின் விதிகளின்படி சுற்றுலா செல்ல மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

அதாவது அவர்கள் நான்கு ஆண்டு காலகட்டத்திற்குள் இரண்டு முறை சொந்த ஊர் செல்லலாம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று மற்ற இரண்டு ஆண்டு காலத்தில் இந்தியாவின் மற்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.
 

Rajdhani Express

ராஜ்தானி, சதாப்தி

இந்தத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான பயணச் செலவுகளை மத்திய அரசே பார்த்துக் கொள்ளும். இந்தியாவில் எந்த இடத்திற்கும் LTC திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடியும்.

LTC திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் கட்டணமின்றி பயணிக்கும் பட்டியலில் முன்பு ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்கள் இருந்தன. இப்போது தேஜாஸ், வந்தே பாரத் மற்றும் ஹம்சஃபர் ஆகிய பிரீமியம் ரயில்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!