மகா கும்பமேளா 2025: டிரோன் காட்சிகள்
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 நிகழ்வை டிரோன் கேமராக்கள் அழகாக படம் பிடித்துள்ளன. மகா கும்பமேளா 2025 சிறப்பு படங்களை பார்க்கலாம்.
கங்கையில் பக்தர்கள்
கங்கையில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் நீராடி வருகின்றனர். நீராடுபவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய நீராடும் காட்சி
மகா கும்பமேளாவின் முக்கிய நீராடும் இடத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மகாசங்கராந்தி விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
படகுகளின் காட்சி
கங்கை நதியில் படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக இந்தப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அற்புத அனுபவம்
மகா கும்பமேளா ஒரு மத நிகழ்வு மட்டுமல்ல, ஒரு அற்புதமான அனுபவம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பௌர்ணமி நீராடல்
மகா கும்பமேளாவில் மவுனி பௌர்ணமி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சிறப்பு நாளில் பக்தர்கள் அதிகமாக புனித நீராடினர்.
திரிவேணி சங்கமம்
பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் மவுனி பௌர்ணமி அன்று நீராடினர். வரும் பிப்ரவரி மூன்றாம் தேதியும் புனித நீராடளுக்கான முக்கிய நாளாக கருதப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் கூடும் இடமே திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில்தான் பக்தர்கள், சாதுக்கள் புனித நீராடினர்.