பீகார் மாநிலத்தில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்குத்து வரும் நிலையில் கூட்டணிக்குள் பாஜகவின் கை ஓங்கியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களான பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. நிதிஷ்குமார் தலைமையில் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ் அடங்கிய மகாகன் பந்தன் கூட்டணியும் நேரடியாக களம் காண்கின்றன. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் நாடு முழுவதும் இந்த தேர்தல் மிகப்பெரிய கவனம் ஈர்த்துள்ளது.
24
பாஜக முன்னிலை
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், ஜேடியுவும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தலை நிதிஷ்குமார் தலைமையில் சந்திக்கிறோம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில் தபோது நிதிஷ்குமாரை காட்டிலும் பாஜக அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
34
முதல்வராவாரா நிதிஷ்..?
தேர்தலை நிதிஷ்குமார் தலைமையில் தான் சந்திக்கிறோம் என அமித்ஷா தெரிவித்திருந்தாலும் முதல்வர் வேட்பாளர் அவர் தான் என்பதை அவர் எந்த இடத்திலும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் நிதிஷ் தலைமையிலான ஜேடியு 70 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் பாஜக 81 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் முதல்வர் பாஜக.வைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் பாஜக அண்மை காலமாக அதிகமான நலத்திட்டங்களை வழங்கி வந்தது. மேலும் தங்களுக்கு தேவையான திட்டங்களை நிதிஷ் உரத்த குரலில் கேட்டு பெற்று வந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியிடம் நிதிஷ் இனி வாலாட்ட முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.