டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை வெடிக்கச் செய்தது மருத்துவர் முகமது உமர் நபி தான் என்பதை டிஎன்ஏ அடிப்படையில் அதிகாரிகள் உறுதி செய்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மருத்துவர்களையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
24
NIA விசாரணை
முன்னதாக இந்த வழக்கை டெல்லி போலீசார் விசாரித்த நிலையில், பயங்கரவாத தொடர்பு இருப்பதால் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
34
டிசம்பர் 6 தான் டார்கெட்
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி டெல்லியின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி திட்டமிடப்பட்டிருந்ததாகவும். ஹரியானா மாநிலத்தில் சுமார் 3000 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர் உமர் நபி இனி நாம் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் அன்றைய தினமே டெல்லியில் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதலுக்காக 32 கார்களில் வெடிபொருட்களை நிரப்பி டெல்லியில் மக்கள் கூடும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாக்குதல் நடத்துவதற்காக உமர் வாங்கியிருந்த ஃபோர்ட் ஈகோ ஸ்போர்ட் கார், பிரெஸ்ஸா காரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.