Bihar Polls: NDA Wins Muslim Areas, Congress Loses Big: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக வாரிச்சுருட்டியுள்ளது. இங்கு காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக, ஜக்கிய ஜனதா தளம், எல்ஜேபி ஆகிய கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி இப்போது வரை 201 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணி வெறும் 36 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதன்மூலம் பீகாரில் பாஜக, ஜேடியு கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
24
இஸ்லாமியர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக கூட்டணி
பீகார் தேர்தலில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும்விதமாக இஸ்லாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்குகளை அறுவடை செய்து முன்னிலையில் உள்ளது. 2022 பீகார் கணக்கெடுப்பின்படி, முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 17.7% பேர் உள்ளனர். இப்போதைய நிலவரப்படி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 16 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
34
ஐக்கிய ஜனதா தளம், எல்ஜேபி ஆதிக்கம்
அதாவது என்டிஏ கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 2020 சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடும்போது கூடுதலாக 8 முஸ்லீம்கள் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
அதே கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வானின் எல்ஜேபி கணிசமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட ஆறு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2020 சட்டமன்றத் தேர்தலில் வென்ற முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள 7 தொகுதிகளை ஆர்ஜேடி இப்போது இழந்துள்ளது.
இதேபோல் காங்கிரஸ் கடந்த தேர்தலில் வைத்திருந்த 4 தொகுதிகளையும் இழந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் ஆர்ஜேடி 18 இடங்களை வென்றிருந்தது. காங்கிரஸ் ஆறு இடங்களைப் பிடித்திருந்தது. இப்போது மகாபந்தன் கூட்டணி இஸ்லாமிய தொகுதிகளில் பலத்த அடி வாங்கியதே படுதோல்விக்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது.
பீகாரில் இஸ்லாமியர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களித்து வந்த நிலையில், இந்த முறை பாஜக கூட்டணிக்கு வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர். பெண்களுக்கு ரூ.10,000 உள்ளிட்ட வாக்குறுதிகளே தேசிய ஜனநாயக கூட்டணி இஸ்லாமியர்கள் வாக்குகளை வாரிச்சுருட்ட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.