ஆர்.எஸ்.எஸுக்கு எதிர்ப்பு..! விமான நிலையத்திற்குள் தொழுகையா..? மாநில அரசின் டபுள் கேம்..! பற்றி எரியும் சர்ச்சை..!

Published : Nov 10, 2025, 11:07 AM IST

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய அணிவகுப்புகளை எதிர்த்ததற்காகவும், தடைசெய்யப்பட்ட பொது இடங்களில் பிற மத நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருந்ததற்காகவும் காங்கிரஸ் அரசை அவர் விமர்சித்தார்.

PREV
13

கர்நாடகாவில் , கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2 -க்குள் தொழுகை செய்தவர்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பு குறைபாடு, காங்கிரஸ் அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடக பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் பிரசாத், இந்த சம்பவ வீடியோவை பகிர்ந்து ‘‘முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர் பிரியங்க் கார்கேவும் உயர் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பிரார்த்தனைகளை அங்கீகரித்தார்களா? பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் டி2 முனையத்திற்குள் இது எப்படி அனுமதிக்கப்படுகிறது? முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர் பிரியங்க் கார்கேவும் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?” எனக் கேள்வ்வி எழுப்பியுள்ளார்.

23

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய அணிவகுப்புகளை எதிர்த்ததற்காகவும், தடைசெய்யப்பட்ட பொது இடங்களில் பிற மத நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருந்ததற்காகவும் காங்கிரஸ் அரசை அவர் விமர்சித்தார். “இந்த நபர்கள் உயர் பாதுகாப்பு விமான நிலைய மண்டலத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றார்களா? சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதியைப் பெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தும்போது மட்டும் அரசு ஆட்சேபனை தெரிவிக்கிறது. ஆனால் தடைசெய்யப்பட்ட பொதுப் பகுதியில் இதுபோன்ற செயல்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? இது போன்ற ஒரு உணர்திறன் மிக்க மண்டலத்தில் இது ஒரு கடுமையான பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தவில்லையா?" என்று அவர் கூறினார்.

33

நவம்பர் 3 ஆம் தேதி கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ்ஸின் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி, அதை ஒரு அமைப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. “ஆர்.எஸ்.எஸ் தங்கள் செயல்பாடுகளைச் செய்ய அரசிடம் அனுமதி பெற்று தங்களை ஒரு அமைப்பாகப் பதிவு செய்யும் வரை எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பைப் பற்றி அவர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் இவ்வளவு ரகசியமாக இருக்கிறார்கள்? பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களை எப்படி அணிவகுத்துச் செல்ல முடியும்? ஆர்.எஸ்.எஸ் நாட்டின் சட்டத்தைப் பின்பற்றக்கூடாது என்பதில் பாஜக ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளது?" என்று கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு நீட்டிக்கப்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு தொடர்பாகவும் அமைச்சர் கார்கே கேள்வி எழுப்பி இருந்தார். அத்தகைய பாதுகாப்பு பொதுவாக பிரதமர் மற்றும் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories