பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கும் பலூசிஸ்தான் தலைவர்கள், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சை ஆதரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். பலூச் தலைவர் மிர் யார் பலூச், ராஜ்நாத் சிங்கின் அறிக்கையை ஆதரித்து சமூக ஊடக தளமான எக்ஸ்தளப்பதிவில், "இந்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையை பலூசிஸ்தான் குடியரசு பாராட்டுகிறது. 60 லட்சம் பலூசிஸ்தான் மக்களும் இந்தியாவுடன் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
ராஜ்நாத் சிங்கின் அறிக்கையை பலூச் தலைவர்கள் ஆதரித்ததற்கான காரணம், பலூசிஸ்தான் குடியரசு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற தொடர்ந்து போராடி வருகிறது. இந்த அமைப்பு பல சந்தர்ப்பங்களில் இந்தியாவின் உதவியை பகிரங்கமாக நாடியுள்ளது. ஆனால் இந்தியா ஒருபோதும் பலூச்சை பகிரங்கமாக ஆதரித்ததில்லை.