தீபாவளி கின்னஸ் சாதனை! 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தி!

First Published | Nov 11, 2023, 10:33 PM IST

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

Ayodhya Deepotsav 2023

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் சனிக்கிழமை பிரமாண்டமான தீபோத்ஸவ் கொண்டாட்டங்கள் நடந்தன. இதனை முன்னிட்டு அயோத்திர நகரில் உள்ள கட்டங்கள் முழுவதும் லட்சக்கணக்கான மண் விளக்குகளால் ஒளிர்ந்தன.

Diwali 2023: Ayodhya Deepotsav

சரயு நதிக்கரையில் அமைந்துள்ள கோவில் நகரமான அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு தீபோத்ஸவம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தீபோத்ஸவக் கொண்டாட்டம் புதிய உலக சாதனையாக மாறியுள்ளது.

Tap to resize

Deepotsav 2023

அயோத்தியில் உள்ள 51 இடங்களில் ஒரே நேரத்தில் சுமார் 22.23 லட்சம் தீபங்கள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த சாதனைப் படைத்த அயோத்தி முந்தைய சாதனையையும் இந்த ஆண்டு முறியடித்துவிட்டது.

Ayodhya Deepotsav Photos

2017 இல் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் அமைந்தவுடன் அயோத்தியில் தீபோத்ஸவ் கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டில், சுமார் 51,000 தீபங்கள் ஏற்றப்பட்டன. 2019இல் இந்த எண்ணிக்கை 4.10 லட்சமாக உயர்ந்தது. 2020ஆம் ஆண்டில், 6 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஒளியேற்றப்பட்டன. 2021இல் 9 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஒளிர்ந்தன.

Deepotsav World Record

2022ஆம் ஆண்டில் 17 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஒளிவீசி கின்னஸ் சாதனை படைத்தன. ஆனால், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் விளக்குகள் எரியவேண்டும் என்ற நிபந்தனை காரணமாக, 15,76,955 விளக்குகள் மட்டுமே கின்னஸ் சாதனையில் பதிவு செய்யப்பட்டன.

Ayodhya Deepotsav Guinness Record

அயோத்தியில் நடைபெறும் தீபோத்ஸவ் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, ராமாயணம், ராமசரிதமானஸ் மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை கருப்பொருளாகக் கொண்ட பதினெட்டு ஊர்திகளின் ஊர்வலம் நடைபெற்றது.

Diwali Deepotsav

உத்தர பிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் இந்த ஊர்வலத்தைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். உதயா சதுக்கத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று ராம் கதா பூங்காவை அடைந்தது.

Latest Videos

click me!