ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு! மத்திய அரசின் திட்டத்தில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

First Published | Oct 12, 2023, 8:44 AM IST

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும். இதற்கான அடையாள அட்டையை எளிமையாக ஆன்லைனில் பெறலாம்.

Free Medical Insurance

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவக் காப்பீடு திட்டம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக ரூ.8000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

Medical Insurance Scheme

இந்தத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை செலவில்லாமல் பெற முடியும். தமிழ்நாட்டில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துடன் சேர்ந்து ஆயுஷ்மான் யோஜனா திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Tap to resize

Rs 5 lakh Health Insurance

நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும், 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இத்திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடுக்கான அடையாள அட்டை வழங்கப்படும். இதைப் பெறுவதற்கு எளிமையான வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

Ayushman Bharat Health Insurance Scheme

அனைவரும் healthid.ndhm.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இணையதளத்திற்குச் சென்றதும் Create ABHA number என்பதை கிளிக் செய்யவேண்டும். பின் ஆதார் எண், டிரைவிங் லைசென்ஸ் போன்ற அடையாளச் சான்று ஒன்றை வைத்து உள்ளே நுழைய வேண்டும்.

Ayushman Bharat Card

ஆதார் அட்ட்ஐ எண்ணை பதிவு செய்தால் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணுக்கு OTP மெசேஜ் கிடைக்கும். அந்த மெசேஜில் OTP எண்ணை பதிவு செய்து உள்ளே நுழைந்ததும் மருத்துவ காப்பீடு அட்டையைக் காணலாம். அதை டவுன்லோட் செய்யும் வசதியும் இருக்கும். டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Latest Videos

click me!