கர்நாடகா பந்த்.! தமிழகத்திற்கு எதிராக போரட்டத்தில் களம் இறங்கிய நடிகர், நடிகைகள்- யார் யார் தெரியுமா.?

First Published | Sep 29, 2023, 12:05 PM IST

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் இன்று ஒரு நாள் பந்த் நடைபெற்று வரும் நிலையில், கன்னட  திரைப்பட நடிகர், நடிகைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 

காவிரி பிரச்சனை- கர்நாடகாவில் பந்த்

தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக கர்நாடக அரசிடம் காவிரி மேலாண்மை வாரியம் ஏற்கனவே அறிவுறுத்திய நீரை வழங்க வலியுறுத்தியது. ஆனால் கர்நாடக அணைகளில் உரிய தண்ணீர் இல்லையென்றும், கர்நாடக மக்களிட் குடிநீர் தேவைக்காக மட்டுமே நீர் இருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு முறையிட்டது. 

cauvery

முதலமைச்சர் உருவப்படங்கள் எரிப்பு

இதனையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை எரித்தும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

Tap to resize

வெறிச்சோடிய சாலைகள்

இதன் அடுத்த கட்டமாக பெங்களூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பந்த் நடைபெற்றது. இதன் காரணமாக பேருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் பந்த நடைபெறுகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.  ஒரு சில பகுதிகளில் கன்னட அமைப்புகள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. 

விமான நிலையத்தில் போராட்டம்

தமிழகத்திற்கு எதிராக முழக்கங்களும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படங்களும் எரிக்கப்பட்டது. மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டயர்களை எரித்தும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் கெம்ப கவுடா விமான நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

நடிகர், நடிகைகள் போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலும் கர்நாடகாவில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என வலியுறுத்து நடைபெறும் போராட்டத்தில் கன்னட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், திரைப்பட் மற்றும் நாடக நடிகர்கள் ஶ்ரீநாத், ஸ்ருதி, உமாஶ்ரீ, ரகு முகர்ஜி, அனு பிரபாகர், விஜய் ராகவேந்திரா, முரளி, நீனசம் சதீஷ், பூஜா காந்தி, பாமா ஹரீஷ், அனிருத், பத்மா வசந்தி, ரூபிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

முன்னனி நடிகர்கள் பங்கேற்கவில்லை

அதே நேரத்தில் நடிகர் நடிகர்கள் போராட்டத்தில்,  ஷிவ்ராஜ்குமார், யாஷ், தர்ஷன், சுதீப் உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதே போல பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

கர்நாடகாவில் பந்த்.! தமிழக எல்லையில் பதற்றம்- நிலைமையை கண்காணிக்க மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி உத்தரவு

Latest Videos

click me!