கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உணவு பழக்கம், வேலை பளு உள்ளிட்டவறை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி இருந்த போதிலும் இளம் வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் குறித்து ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது.