அயோத்தியில் ராமாயணத்தைப் பிரதிபலிக்கும் புதிய ரயில் நிலையம்! வெற லெவல் லுக்கில் AI போட்டோஸ்!

First Published | Nov 5, 2023, 12:11 AM IST

அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி மாதம் திறக்கப்பட இருக்கும் நிலையில், அங்கு திறக்கப்பட உள்ள பிரம்மாண்டமான ரயில் நிலையத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ள. சமூக வலைத்தளங்களில் இந்தப் படங்கள் வரைலாகப் பரவிவருகின்றன.

Ram Janmabhoomi

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பயணிகளை வரவேற்க ராமர் கோயில் அறக்கட்டளை பல ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்நிலையில் ராமர் கோயிலைக் காண வரும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே அதிநவீன ரயில் நிலையத்தை உருவாக்கி வருகிறது ராமாயண பின்னணியில் அயோத்தி ரயில் நிலையம் உருவாக உள்ளதாக AI புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

Ayodhya Ram temple

இதற்காக அயோத்தி ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் 104.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இந்த ரயில் நிலைய கட்டிடத்தை இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் நிறுவனமான RITES லிமிடெட் கட்ட உள்ளது. இந்தக் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று சொல்லப்பபடுகிறது.

Latest Videos


Ayodhya Railway Station

முதற்கட்டமாக, முதல் மூன்று பிளாட்பாரம்களில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும். தற்போதைய சுற்றுவட்டாரப் பகுதியின் மேம்பாடு, தண்டவாளங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் நடக்கும். இரண்டாம் கட்டமாக, புதிய ரயில் நிலைய கட்டடம் மற்றும் இதர வசதிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் நிலையத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அயோத்தியில் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையத்தின் முதல் கட்டப் பணிகளை முடிக்க சுமார் ரூ.241 கோடி செலவிடப்பட்டுள்ளது.

Ramayana

இந்த ஸ்டேஷனில் வாகன நிறுத்துமிடம், ஊழியர்களுக்கான தங்குமிடம், ரயில்வே போலீசாருக்கான அலுவலகம், மூன்று புதிய நடைமேடைகள் என பல வசதிகள் இருக்கும். இந்த ரயில் நிலையம் ராமர் கோவில் வடிவத்திலேயே இருக்கும். ரயில் பயணிகள் இறங்கியவுடன், அயோத்தி கோயிலை அடைந்த உணர்வைத் தரும் வகையில் உருவாக்கப்படுகிறது.

click me!