Child Birth : 3வது குழந்தைக்கு ரூ.30,000.. 4வது குழந்தைக்கு ரூ.40,000.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Published : May 17, 2026, 03:31 PM IST

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க, முதல்வர் ஒரு புதிய பண உதவி திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், மூன்றாவது குழந்தைக்கு ரூ.30,000 மற்றும் நான்காவது குழந்தைக்கு ரூ.40,000 வழங்கப்படும்.

PREV
12
மக்கள் தொகை குறைவால் புதிய முடிவு

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார். இதனை சமாளிக்கவே குடும்பங்களுக்கு பண உதவி வழங்கும் புதிய திட்டத்தை அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • 3வது குழந்தைக்கு ரூ.30,000
  • 4வது குழந்தைக்கு ரூ.40,000

முழு விவரங்கள் விரைவில் வெளியீடு

இந்த புதிய திட்டம் ஆந்திராவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் தகவலை வெளியிட்டார். முன்னதாக இரண்டாவது குழந்தைக்கு மட்டும் உதவி வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 3வது மற்றும் 4வது குழந்தைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

22
ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது?

உலகளவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் பிறக்கும்போது மட்டுமே மக்கள் தொகை நிலையாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது பல குடும்பங்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற விரும்புவதால், எதிர்காலத்தில் பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அரசு கருதுகிறது.

முதல்வர் கூறிய காரணங்கள்:

  • பிறப்பு விகிதம் குறைவு
  • எதிர்கால பணியாளர் பற்றாக்குறை
  • பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகை அவசியம்

‘குழந்தைகள் சுமை அல்ல’.. நாயுடுவின் கருத்து

“குழந்தைகள் ஒரு சுமை அல்ல; அவர்கள் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் ஒரு சொத்து” என்று முதல்வர் நாயுடு தெரிவித்துள்ளார். தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை சரிவை இந்தியா சந்திக்க என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அரசியல் சர்ச்சையும் கிளம்பியது

இந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன. மக்களவை தொகுதி மறுசீரமைப்பை மனதில் வைத்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இருந்தாலும், மக்கள் தொகை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories