இந்த குறிப்புகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவை அசல் நீட் வினாத்தாளுடன் மிகத் துல்லியமாக பொருந்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களும் தற்போது தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மத்திய கல்வி அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில், மே 12 அன்று சிபிஐ வழக்குப் பதிவு செய்து, தனிப்பட்ட விசாரணைக் குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக் மற்றும் புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், வினாத்தாள் கசிவு சர்ச்சையால் ரத்து செய்யப்பட்ட நீட் UG தேர்வு, ஜூன் 21 அன்று மீண்டும் நடத்தப்பட உள்ளது. சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது, நீட் தேர்வு வரலாற்றில் முதல் முறையாகும். இந்த சர்ச்சைக்குப் பிறகு, அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.