Kerala Lottery Result : ரூ.1 கோடி ஜாக்பாட் அடித்த அதிர்ஷ்ட எண் இதுதான்.. உடனே செக் பண்ணுங்க!

Published : May 15, 2026, 05:25 PM IST

கேரளாவில் நடந்த சுவர்ணா கேரளம் SK-52 லாட்டரி குலுக்கலில் ரூ.1 கோடி முதல் பரிசை வென்ற அதிர்ஷ்ட எண் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் டிக்கெட் எண்ணும் இந்த பட்டியலில் இருக்கிறதா? உடனே செக் பண்ணுங்க!

PREV
15
கேரளா லாட்டரி ரிசல்ட் வெளியீடு

கேரள மாநில லாட்டரிகள் துறை வெளியிட்டுள்ள சுவர்ணா கேரளா SK-52 லாட்டரி குலுக்கல் முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மே 15, 2026 வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த குலுக்கல், திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் நடந்தது. ரூ.1 கோடி முதல் பரிசு அறிவிக்கப்பட்டதால், மாநிலம் முழுவதும் லாட்டரி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்தனர். காலை முதலே பலரும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செய்தி தளங்களில் நேரடி அப்டேட்களை தொடர்ந்து கவனித்தார்கள்.

25
ரூ.1 கோடி முதல் பரிசு வென்ற அதிர்ஷ்ட எண்

இந்த வார சுவர்ணா கேரளா குலுக்கலில், RR 281074 என்ற டிக்கெட் எண்ணுக்கு முதல் பரிசான ரூ.1 கோடி கிடைத்துள்ளது. இதே எண்ணின் மற்ற சீரிஸ் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.5,000 ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு லேட்டரி விதிமுறைகளின்படி, வெற்றியாளர்களின் பரிசுத் தொகையில் 30 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும். அதனால், பரிசு பெறுபவர்கள் அதிகாரப்பூர்வ நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

35
இரண்டாம் பரிசு எண்கள்

இரண்டாம் பரிசான ரூ.30 லட்சத்தை RN 323012 என்ற டிக்கெட் வென்றுள்ளது. மேலும், மூன்றாம் பரிசான ரூ.5 லட்சத்தை RZ 440438 என்ற எண்ணுடைய டிக்கெட் கைப்பற்றியுள்ளது. இதனுடன், நான்காம் மற்றும் ஐந்தாம் பரிசுகளுக்கான பல டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ரூ.5,000 மற்றும் ரூ.2,000 பரிசுகள் பெற்ற எண்ணிக்கை குறித்து லத்தரி வாங்கியவர்கள் தீவிரமாக சரிபார்த்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த வெற்றி எண்கள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

45
கேரளா லாட்டரி வெற்றியாளர்கள் கவனத்திற்கு

வெற்றி பெற்றவர்கள், தங்களுடைய டிக்கெட் எண்களை கேரள அரசின் அதிகாரப்பூர்வ கெசட்டில் சரிபார்த்து உறுதி செய்த பிறகே பரிசுத் தொகைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் பரிசு வெற்றியாளர்கள், ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற அடையாள ஆவணங்களுடன் தங்களது அசல் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும். மாநில லாட்டரி இயக்குநரக அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பரிசுத் தொகையைப் பெறலாம்.

55
பரிசு பெற முக்கிய விதிமுறைகள்

மேலும், குலுக்கல் நடைபெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பரிசுக்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என கேரள மாநில லாட்டரி துறை தெரிவித்துள்ளது. காலவரம்பை மீறினால், பரிசுத் தொகையை பெற முடியாத நிலை. இதனால், வெற்றி பெற்றவர்கள் தங்களது டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories