NEET Breaking News..! நாடு முழுவதும் மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து.. தேர்வு முகமை அறிவிப்பு

Published : May 12, 2026, 12:52 PM IST

நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வை ரத்து செய்வதாக தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் மறு தேர்வு தொடர்பான தேதி விரைவில் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
13
நீட் வினாத்தாள் கசிவு..

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்றது. தேர்வு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. ஆனால் தேர்வு நடைபெறுவதற்கு 15 முதல் 1 மாதத்திற்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வினாத்தாள் கசிந்துவிட்டதாகவும், ஆகவே தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

23
நீட் தேர்வு ரத்து

இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அதிரடியாக அறிவித்துள்ளது. மீண்டும் அடுத்த தேர்வு தேதி தொடர்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படுமென தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

33
மீண்டும் தேர்வு கட்டணம்..?

இதனிடையே மாணவர்களின் தேர்வுக்கட்டணம் முழுவதுமாக அவர்களிடமே திருப்பி செலுத்தப்படுமென தெரிவித்துள்ள தேர்வு முகமை புதிய தேர்வுக்கு மாணவர்கள் தனியாக விண்ணப்பக்க தேவையில்லை. மேலும் மீண்டும் மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மீண்டும் நடத்தப்படவுள்ள நீட் தேர்வுக்கான முழு செலவையும் முகமையே ஏற்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories