ஆனந்த் அம்பானியின் செல்ல நாய்க்குட்டி ஹேப்பி
அதனால்தான் வனதாரா 'விலங்குகளின் தாஜ்மஹால்' என்று அழைக்கப்படுகிறது. தற்போது வனதாராவில் 200 யானைகள், 300 சிறுத்தைகள், 300 மான்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட முதலைகள், பாம்புகள் மற்றும் ஆமைகள் பராமரிக்கப்படுகின்றன. இப்படி விலங்குகளை விழுந்து விழுந்து கவனிக்கும் ஆனந்த் அம்பானி, தன்னுடைய வீட்டிலும் ஒரு செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். அதில் அவரின் செல்ல நாய்க்குட்டியான ஹேப்பியும் ஒன்று.
கோல்டன் ரிட்ரைவர் வகை நாயான இது அம்பானி குடும்பத்தில் ஒரு செல்லக் குழந்தை போல் வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நடந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கூட இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடை அணிந்து ஜம்முனு வலம் வந்து கொண்டிருந்தது ஹேப்பி. இந்நிலையில், உடல்நலக்குறைவால் ஏப்ரல் 30ந் தேதி உயிரிழந்துள்ளது. ஹேப்பியின் மறைவால் அம்பானி குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது. நீ என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருப்பாய் என அம்பானி பேமிலி இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.