கொல்கத்தா ஹோட்டலில் கொளுந்து விட்டு எரிந்த தீ : தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் கருகி பலி

Published : Apr 30, 2025, 09:25 AM IST

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட பலர் பலியாகினர்.

PREV
15
கொல்கத்தா ஹோட்டலில் கொளுந்து விட்டு எரிந்த தீ : தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் கருகி பலி
கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து

 கொல்கத்தாவில் உள்ள மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. தீயானது கொளுந்து விட்டு எரிந்ததால் அருகில் இருந்தவர்களால் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த  தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

25
தீ விபத்தில் 14 பேர் பலி

தீ விபத்தின் போது பாஸ்வான் என்ற நபர் தீயிலிருந்து தப்பிக்க மேலிருந்து குதித்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர். கடும் புகையால் ஹோட்டல் முழுவதும் நிரம்பியதால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியவில்லை.

பின்னர் அவர்கள் ஏணிகள் மூலம் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியின் ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்றனர். ஹோட்டலில் சிக்கியிருந்த பலர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

35
ஓட்டலில் மறைந்திருந்த மக்கள்

தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.  தீ விபத்து ஏற்பட்ட பிறகு ஹோட்டலில் தங்கியிருந்த மக்கள் பாதிப்பு ஏற்படாத பகுதியில் மறைந்து இருந்த நிலையில்,  பின்னர் தீயணைப்பு வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். ஹோட்டலில் சுமார் 47 அறைகள் இருந்ததாகவும், ஒவ்வொரு அறையிலும் மக்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

45
தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி

புகை காரணமாக தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபு மற்றும் அவரது குழந்தைகள் தீவிபத்தில் சிக்கியதாக தகவல் கூறப்படுகிறது. 

55
விபத்திற்கு காரணம் என்ன.?

தீ விபத்து ஏற்பட்ட சாலை, சென்ட்ரல் அவென்யூ மற்றும் பிதன் சரணியை இணைக்கும் பரபரப்பான சாலையாகும். இதனால் தீ வேகமாக பரவும் அபாயம் இருந்தது. மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம், கொல்கத்தா நகராட்சி ஆணையர் மனோஜ் வர்மா மற்றும் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சசி பாஞ்சா ஆகியோர் அதிகாலை வரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர் 

Read more Photos on
click me!

Recommended Stories