அவர்கள் இந்தியாவிற்குள் வந்த 24 மணி நேரத்திற்குள் FRRO அல்லது FRO-வில் பதிவு செய்ய வேண்டும். குடியிருப்பு அனுமதியும் வழங்கப்படும், இது அவர்களின் வசிப்பிடம் மற்றும் முகவரியை அதிகாரப்பூர்வமாகக் கண்காணிக்கும். இந்த விவரங்கள் மாநில அரசுகளிடமும் இருக்கும். எனவே, பாகிஸ்தான் குடிமக்களை அடையாளம் காண்பaதில் மாநில காவல்துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த விவரங்களை மத்திய அரசுக்கும் மாநில அரசுகள் அனுப்பும்.
மேலும், IB, RAW போன்ற இந்திய உளவு அமைப்புகள் பாகிஸ்தான் குடிமக்களின் நடமாட்டத்தைக் தொடர்ந்து கண்காணிக்கும். சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்.
விசா காலாவதியான பிறகு நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தான் குடிமக்களை அடையாளம் காண, காவல்துறை மற்றும் உளவுத்துறை உள்ளூர் தொடர்பு மூலம் சோதனை செய்யும். இவர்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள்.