ஏடிஎஸ்பி கன்னத்தில் அறைய முற்பட்ட கர்நாடகா முதல்வர்.! அதிர்ச்சியில் போலீசார்

Published : Apr 28, 2025, 05:47 PM ISTUpdated : Apr 28, 2025, 07:47 PM IST

 சித்தராமையாவிற்கு எதிராக பாஜக பெண் நிர்வாகி கருப்பு கொடி காட்டியதால், காவல்துறையினரை கடுமையாக திட்டினார். கூடுதல் எஸ்பி நாராயண பரமணியை அறையவும் முயன்றார். 

PREV
14
ஏடிஎஸ்பி கன்னத்தில் அறைய முற்பட்ட கர்நாடகா முதல்வர்.! அதிர்ச்சியில் போலீசார்

Pahalgam Terror Attack Karnataka CM Siddaramaiah காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

24

போரை ஆதரிக்கவில்லை. அமைதி நிலவ வேண்டும்

இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் என இரு தரப்பும் போருக்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியது. ஏவுகனை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. அமைதி நிலவ வேண்டும், மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

34
Karnataka Chief Minister Siddaramaiah

கருப்பு கொடி போராட்டம்

இந்த நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தில் CPED மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சித்தராமையா கலந்து கொண்டார். சித்தராமையா உரையாற்றிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் நுழைந்த பாஜக பெண் நிர்வாகி கருப்பு ஆடையை கழற்றி எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து மேடைக்கு முன்பாக சென்று சித்தராமையாவிற்கு எதிராக முழக்கத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த முதலமைச்சர் சித்தராமையா,

44
Siddaramaiah Angry at Police Officer

போலீசாரை அடிக்க பாய்ந்த முதல்வர்

காவல்துறையினரை மேடைக்கு அழைத்த அவர் கடுமையாக திட்டினார். ஒரு கட்டத்தில் கூடுதல் எஸ்பி நாராயண பரமணி கண்ணத்தில் அறையவும் சித்தராமையா முயன்றார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதனிடையே முதல்வர் சித்தராமையா முன்னிலையில் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுப்ட்ட பாஜக பெண் நிர்வாகி  ஷில்பா  கைது செய்யப்பட்டார்

Read more Photos on
click me!

Recommended Stories