அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட எட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ரூ. 44 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக எட்டு ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு எதிராக இறுதி உத்தரவுகளைப் பிறப்பித்து, மொத்தம் ரூ. 44 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
24
அமேசான், மெட்டா விதீமீறல்
நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காகவும், தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காகவும் மெட்டா (Meta), அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மீஷோ (Meesho) ஆகிய நான்கு முன்னணி நிறுவனங்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜியோமார்ட் (JioMart), சிமியா (Chimiya), டாக் ப்ரோ (Talk Pro) மற்றும் மாஸ்க்மேன் டாய்ஸ் (Maskman Toys) ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார்.
34
வாக்கி-டாக்கி அனுமதி
இந்தியாவில் வாக்கி-டாக்கிகள் மற்றும் ரேடியோ உபகரணங்களை விற்பனை செய்ய தொலைத்தொடர்புத் துறையின் (DoT) உரிய அனுமதி மற்றும் உரிமம் அவசியம். ஆனால், இந்த ஆன்லைன் தளங்களில் சுமார் 16,970-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத பொருட்கள் பட்டியலிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, காவல்துறையினர் மற்றும் அவசரகால சேவையினர் பயன்படுத்தும் அதிநவீன அலைவரிசைகளில் (UHF Band) இந்தச் சாதனங்கள் குறுக்கீடுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாகக் கருதப்பட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை மீஷோ, மெட்டா, சிமியா, ஜியோமார்ட் மற்றும் டாக் ப்ரோ ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டன. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் இன்னும் அபராதத்தைச் செலுத்தவில்லை.
இனிவரும் காலங்களில் இ-காமர்ஸ் தளங்கள் இத்தகைய உபகரணங்களை விற்பனைக்கு வைக்கும் முன், முறையான அரசு அனுமதியைச் சரிபார்க்க வேண்டும் எனப் புதிய 2025-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.