அஜித் பவார் முதல் சஞ்சய் காந்தி வரை.. விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் விவரம்!

Published : Jan 28, 2026, 11:35 AM IST

அஜித் பவார், பிபின் ராவத் முதல் சஞ்சய் காந்தி வரை விமான விபத்துகளில் உயிரிழந்த முக்கிய இந்தியர்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரை, ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகளால் நாடு இழந்த தலைவர்களின் சோகமான நிகழ்வுகளை விவரிக்கிறது.

PREV
19
Ajit Pawar

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து பாராமதிக்கு சிறிய ரக தனி வமானத்தில் 4 பேருடன் பயணித்துள்ளார். பாராமதியில் தரையிறங்கும்போது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தார் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அஜித் பவாரின் 2 உதவியாளர் மற்றும் 2 விமானிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்துகளில் உயிரிழந்த முக்கிய இந்தியர்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

29
Maharashtra DCM Ajit Pawar (2026)

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பாராமதியில் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். பாராமதி விமான விபத்தில் என்சிபி தலைவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

39
Former Gujarat Chief Minister Vijay Rupani (2025)

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.

49
General Bipin Rawat (2021)

இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி, அவரது மனைவி மற்றும் 11 பேருடன் சென்ற எம்ஐ-17 ஹெலிகாப்டர், தமிழ்நாட்டின் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் உயிரிழந்தார்.

59
Dorjee Khandu (2011)

அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு. இவர் 2011ம் ஆண்டு மே 4ம் தேதி தவாங்கிலிருந்து இட்டாநகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் டோர்ஜி காண்டு உயிரிழந்தார்.

69
YS Rajasekhara Reddy (2009)

ஆந்திர முன்னாள் முதல்வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

79
O.P. Jindal & Surender Singh (2005)

தொழிலதிபரும், ஹரியானா அமைச்சருமான இவர், சகாரன்பூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

89
Madhavrao Scindia (2001)

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருமான மாதவ்ராவ் சிந்தியா உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே சென்ற போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மகன் ஜோதிராதித்ய சிந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

99
Sanjay Gandhi (1980)

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி. ராஜீவ் காந்தியின் சகோதரரான சஞ்சய் காந்தி 1980ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் பலியானார்.

Read more Photos on
click me!

Recommended Stories