விமான விபத்தில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வர் அஜித் பவார் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிரக்க முற்பட்டபோது ஓடுதளப் பாதையில் இருந்து விலகிய விமானம் வெடித்துச் சிதறிய நிலையில் விமானத்தில் பயணித்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
24
தொழில்நுட்ப கோளாறு..
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காலையில் வழக்கம் போல தனது உதவியாளர்களுடன் சிறிய ரக விமானத்தில் அஜித் பவார் புறப்பட்ட நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானி தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்ததும், அருகில் இருந்த விமான ஓடுதளப் பாதையில் விமானத்தை தரையிறக்க முற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் விமானம் தரையில் வேகமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் விமானத்தில் இருந்த எரிபொருள் முற்றிலுமாக வெடித்துச் சிதறிய நிலையில் விமானம் முற்றிலுமாக எரியத் தொடங்கி உள்ளது.
34
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் பவார்
விமானம் சரியாக 8.45 மணிக்கு விபத்தில் சிக்கிய நிலையில் அஜித் பவார் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் துணைமுதல்வருடன் சேர்த்து அவரது உதவியாளர்கள், விமானி உட்பட மொத்தமாக 6 பேரும் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார் 6 முறை துணைமுதல்வராக பதவி வகித்துள்ளார். மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக அஜித் பவார் பொறுப்பு வகித்துள்ளார். சரத்பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அஜித் பவார் தனித்து செயல்படத் தொடங்கினார். இந்த நிலையில் அஜித் பவாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.