வாக்காளர் பட்டியல் திருத்தம்... ஆதார் அட்டை செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published : Aug 22, 2025, 05:22 PM IST

பீகார் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் குடியிருப்புக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை சமர்ப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 35 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

PREV
14
பீகார் வாக்களர் பட்டியல் திருத்தம்

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக, திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் குடியிருப்புக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை சமர்ப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 22, 2025) உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் சேர்க்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

24
ஆதார் அட்டை இனி செல்லும்

திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், மீண்டும் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கும்போது, ஆதார் அட்டையை ஆதாரமாகச் சமர்ப்பிக்கலாம்.

சுமார் 35 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் மதிப்பிட்டுள்ளது. இவர்களில் இறந்தவர்கள் மற்றும் இரண்டு முறை பதிவு செய்தவர்களின் பெயர்களை கழித்த பின்னரும் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் செப்டம்பர் 1-க்குள் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த விண்ணப்பங்களை ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

34
அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கானோர் நீக்கப்பட்டது தொடர்பாக பீகார் அரசியல் கட்சிகளின் செயலற்ற தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. "அரசியல் கட்சிகள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யவில்லை" என்றும், "பூத்-லெவல் ஏஜென்ட்கள் (BLA) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?" என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

1.6 லட்சத்துக்கும் அதிகமான பூத்-லெவல் ஏஜென்ட்களில் இருந்து வெறும் இரண்டு ஆட்சேபணைகள் மட்டுமே பெறப்பட்டிருப்பது தங்களுக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகளை விட வாக்காளர்களே விழிப்புணர்வுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் சார்பாக அரசியல் கட்சிகள் எழுத்துப்பூர்வமான ஆட்சேபணைகளை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றும், ஆனால் தனிப்பட்ட முறையில் வாக்காளர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

44
கட்சிகளையும் சேர்க்க உத்தரவு

இதையடுத்து, இந்த வழக்கில் அரசியல் கட்சிகளையும் சேர்க்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையை செப்டம்பர் 8-க்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்பதை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கேட்டார். 

மேலும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 85,000 வாக்காளர்கள் மீண்டும் பெயரை சேர்க்க விண்ணப்பித்துள்ளதாகவும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் புதிதாகப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories