இன்றைய TOP 10 செய்திகள்: தவெக மதுரை மாநாடு முதல் மத்திய அரசின் குட் நியூஸ் வரை

Published : Aug 21, 2025, 10:46 PM IST

மதுரை மாநாட்டில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்த விஜய், கவின் ஆணவப்படுகொலை குறித்து மௌனம் சாதிப்பது ஏன்? 90% பொருட்களின் விலையைக் குறைக்க மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு என்ன? தெரிந்துகொள்ளுங்கள் இன்றைய TOP 10 செய்திகளில்!

PREV
110
மைனாரிட்டி பாஜக அரசை பொளந்து கட்டிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாஜக தலைமையிலான மத்திய அரசை மதுரை மாநாட்டில் கடுமையாக விமர்சித்தார். மத நல்லிணக்கம், நீட் தேர்வு, கச்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் போக்கை விஜய் சாடினார்.

210
ஆணவ படுகொ**லை.. மூச்சு விடாத விஜய்..!

நீட் தேர்வு, மீனவர்கள் பிரச்சனை ஆகியவை குறித்தும் திமுக அரசின் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவை குறித்தும் விஜய் பேசினார். அதே வேளையில் நெல்லையில் நடந்த கவின் ஆணவப்படுகொலை குறித்து விஜய் வாய் ஏதும் திறக்கவில்லை. கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

ஆனால் விஜய் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதனால் மதுரை மாநாட்டில் இது குறித்து விஜய் பேசுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், இங்கும் விஜய் பேசவில்லை.

310
1,538 டன் அரிசியை வீணடித்த அதிகாரிகள்

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கில் 1,538 டன் அரிசி மனித உணவிற்குத் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சட்டசபை குழு ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

410
அதிமுக இன்று எப்படி இருக்கிறது?

"எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக இன்று எப்படி இருக்கிறது? அதிமுக கட்சியை யார் கட்டிக்காப்பது? பொருந்தாக் கூட்டணியாக அதிமுக-பாஜக கூட்டணி உள்ளது. நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உறுதியாக பங்களிப்பு செய்யப்படும். 2026-ல் இருவருக்கு மத்தியில் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக’’ என்று தெரிவித்துள்ளார்."

510
தவெக-வுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இபிஎஸ்!

மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காஞ்சிபுரத்தில் பேசியபோது, புதிதாக கட்சி தொடங்கியவர்களை மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக தொடங்கப்பட்டதன் நோக்கமே திமுகவை ஒழிப்பதுதான் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, "உழைப்பை தராமல் சிலர் பலனை எதிர்பார்க்கிறார்கள். ஒரு மரம் எடுத்ததும் கனியைத் தராது, வளர்ந்து காய்த்த பிறகுதான் கனியைத் தரும்" என்று மறைமுகமாக சாடினார்.

610
தவெக மதுரை மாநாட்டில் சோகச் சம்பவம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டிற்கு வந்த தொண்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரே உயிரிழந்தவர். இந்த சோகச் சம்பவம் மாநாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

710
புடின் - ஜெய்சங்கர் சந்திப்பில் அமெரிக்காவுக்கு மெசேஜ்!

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது ரஷ்ய பயணத்தின் போது அதிபர் புடினை சந்தித்து உக்ரைன் விவகாரம் மற்றும் இருதரப்பு வர்த்தக உறவுகள் குறித்து விவாதித்தார். அமெரிக்காவின் 50% வரி விதிப்பு மற்றும் ரஷ்யா வர்த்தக உறவுகள் குறித்தும் பேசப்பட்டது.

810
தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள்

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பரந்தூர் விமான நிலையம், தேர்தல் நேர்மை, சட்டம் ஒழுங்கு, மீனவர் பிரச்சினை, ஆணவக் கொலைகள், அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஆறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

910
விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று வந்த சுபான்ஷு சுக்லா, தனது விண்வெளிப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மிஷன் பைலட் பணியில் ஈடுபட்ட அவர், இந்தியாவின் விண்வெளித் திட்டங்களின் வளர்ச்சியைப் பாராட்டினார்.

சுக்லா செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் உரியது. இந்த அனுபவம் தரையில் கற்றுக்கொண்டதிலிருந்து மிகவும் மாறுபட்டது. இது ஒரு நம்பமுடியாத அனுபவம்" என்று கூறினார். மேலும், "இந்திய அரசு, இஸ்ரோ, ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்றும் தெரிவித்தார்.

1010
90% பொருட்களின் விலை குறையப் போகுது!

ஜிஎஸ்டி விகித பகுத்தறிவுக்கான அமைச்சர்கள் குழு, நான்கு வரி அடுக்குகளை இரண்டாகக் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜிஎஸ்டி 2.0 என்று அழைக்கப்படுகிறது. இதனால் பல பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிப்பதையும் குழு பரிசீலித்து வருகிறது.

தற்போது ஜிஎஸ்டி 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு வெவ்வேறு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது.

புதிய திட்டத்தின் கீழ், 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்படும். பொருட்கள் மற்றும் சேவைகள் இனி பெரும்பாலும் 5% அல்லது 18% என்ற இரண்டு அடுக்குகளுக்குள் வரும். புகையிலை மற்றும் ஆடம்பர பொருட்கள் போன்ற "தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு" (sin goods) 40% கூடுதல் வரி தொடர்ந்து விதிக்கப்படும். ஆடம்பர கார்களும் இந்த 40% வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories