உங்க பேங்க் அக்கவுண்டுக்கு 2000 ரூபாய் வரப்போகுது.. எப்போ தெரியுமா?

Published : Aug 20, 2024, 12:36 PM IST

இந்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறது. 17 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 18வது தவணை அக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14
உங்க பேங்க் அக்கவுண்டுக்கு 2000 ரூபாய் வரப்போகுது.. எப்போ தெரியுமா?
PM Kisan 18th installment

இந்திய அரசு நாட்டு மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் பலவும் விவசாயிகளுக்கானது என்றே கூறலாம். இந்தியா ஒரு விவசாய நாடு மற்றும் இந்திய அரசு விவசாயிகளின் நலன்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. எனவேதான் விவசாயிகளுக்கு அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது.

24
PM Kisan Yojana

2019 ஆம் ஆண்டில், இந்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா ஆகும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளி விவசாயிகளுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்குகிறது.

34
PM Kisan

இத்தொகை, நான்கு மாத இடைவெளியில், தவணை முறையில், 2,000 ரூபாய் விவசாயிகளுக்கு, அரசால் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் 17 தவணைகள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. இப்போது அனைத்து பயனாளிகளும் திட்டத்தின் 18 வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இது அக்டோபர் மாதத்தில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

44
PM Kisan Samman Nidhi

இந்தத் திட்டத்தின் 17வது தவணை ஜூலை மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜூலைக்குப் பிறகு நான்காவது மாதம் அக்டோபரில் இருக்கும். அக்டோபர் முதல் வாரத்தில் தவணை வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த செய்தி விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories