அட! ரயிலில் Unreserved டிக்கெட்டும் கேன்சல் பண்ணலாமா? எப்படி தெரியுமா?

First Published | Dec 9, 2024, 10:55 AM IST

ரயிலில் முன்பதிவு டிக்கெட் மட்டுமின்றி unreserved ரயில் டிக்கெட்டுகளையும் கேன்சல் செய்ய முடியும். அதைபற்றி இந்த பதிவில் காண்போம். 

Unreserved Train Tickets

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தினமும் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வது ஒருபக்கம் இருக்க, அன்றாடம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வேலைக்கு செல்பவர்கள், திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதில்லாதா டிக்கெட் Unreserved Ticket) எடுத்து பயணம் செய்கின்றனர்.

ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் ஏசி இருக்கை மற்றும் படுக்கை வசதி ஆகிய முன்பதிவு டிக்கெட்டுகளை கேன்சல் செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் முன்பதில்லாதா Unreserved  டிக்கெட்டையும் கேன்சல் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்து விரிவாக காண்போம்.

Can cancel an unreserved train ticket?

இப்போது ரயில் நிலைய டிக்கெட் கண்ட்டர்களில் முன்பதில்லாத டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி, கவுண்ட்டருக்கே நேரடியாக செல்லாமல் செல்போன்கள் மூலம் ரயில்வேயின் Unreserved Ticketing system எனப்படும் UTS ஆப் மூலமாகவும் பெரும்பாலானவர்கள் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கின்றனர். இந்த UTS  ஆப்பில் Unreserved டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி, நாம் பயணம் செய்ய முடியாதபட்சத்தில் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யவும் முடியும்.

3 ஆண்டுகளுக்கு மேல் பயணம்; இந்தியாவின் மிகவும் தாமதமான ரயில் இது தான்!

Tap to resize

How do cancel unreserved train ticket?

UTS ஆப்பில் ரயில் டிக்கெட்டுகளை எப்படி கேன்சல் செய்யலாம்?

* முதல் Log in சென்று உங்களின் செல்போன் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை குறிப்பிட்டு UTS ஆப்பை ஒப்பன் செய்ய வேண்டும்

* பின்பு cancel என்ற ஆப்சனை கிளிக் செய்தால் நீங்கள் புக் செய்த டிக்கெட் அதில் காட்டும்.

* பின்னர் நீங்கள் அதில் cancel ticket (டிக்கெட் ரத்து செய்) என்ற ஆப்சனை கிளிக் செய்ய்யும்போது, உங்கள் கோரிக்கை தகுதியானதா? என சரிபார்க்கப்படும்.

* இதனைத் தொடர்ந்து டிக்கெட் கேன்சல் தொகையை கழித்தபிறகு ரீபண்ட் தொகை குறித்த விவரங்கள் ஒரு சிறிய பாப்-அப் பாக்ஸ்தோன்றும். பின்பு UTS ஆப் மூலம் நீங்கள் செய்த முன்பதிவை ரத்து செய்ய 'சரி' என்பதை அழுத்தவும்.

* பின்னர் புதிய பாப்-அப் பாக்சில் கேன்சல் கட்டணத்தைக் கழித்தது போக மீதி பணத்தை திரும்பப் பெறுவீர்கள்.
 

Train Ticket UTS App

* கேன்சல் கட்டணத்தைக் கழித்தது போக மீதி பணம் நீங்கள் கொடுக்கும் ஆப்சனை பொறுத்து R-wallet அல்லது உங்கள் வங்கி கணக்குக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு கிரெடிட் செய்யப்படும்.

டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிகள் 

* ஒவ்வொரு  Unreserved டிக்கெட்டும் கேன்சல் செய்யும்போது ரூ.30 பிடித்தம் செய்யப்படும். 

* நீங்கள் 30 ரூபாய்க்கு அதிகமாக எடுத்த Unreserved டிக்கெட்டை மட்டுமே கேன்சல் செய்ய முடியும். 30 ரூபாய்க்கு குறைவான Unreserved டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது.

ரயிலில் பொது டிக்கெட்டில் பயணிக்க இதுதான் முக்கியமான விதி! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Latest Videos

click me!