குளிர்கால மாரடைப்பு: காலை நேரத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஒருபோதும் புறக்கணிக்காதீங்க..

First Published | Dec 11, 2023, 3:06 PM IST

குளிர்காலக் காலை நேரங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மாரடைப்பின் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளின் அபாயம் அதிகமாக இருக்கலாம்.. இதற்கு சோம்பல் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவை காரணம் என்று சொல்லப்படுகிறது. மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகளும் அறிகுறிகளும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரிந்திருந்தாலும், குளிர்காலம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் பிற அசாதாரண அறிகுறிகளைக் கொண்டு வரலாம். வெப்பநிலை குறையும்போது, குளிர்காலக் காலை நேரங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மாரடைப்பின் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மார்பு அசௌகரியம்: குளிர்காலத்தில் குறிப்பாக காலை நேரம் மார்பு அசௌகரியத்தை அதிகரிக்கலாம், மேலும் இது எப்போதும் வழக்கமான வலியாக இருக்காது. இது ஒரு நுட்பமான வலி, இறுக்கம் அல்லது அழுத்தம் போன்ற சாத்தியமான இதயத் துயரங்களைக் குறிக்கலாம்.

Tap to resize

மூச்சுத் திணறல்: உங்கள் காலை வழக்கத்தின் போது வழக்கத்திற்கு மாறாக மூச்சுத் திணறல் ஏற்பட்டால அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம், எனவே தொடர்ந்து மூச்சுத் திணறல் இருந்தால் அதற்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மிகுந்த சோர்வு: முழு இரவு தூக்கம் இருந்தபோதிலும், காலையில் அதிக சோர்வாக உணர்ந்தாலோ, இது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். செயல்பாட்டு நிலைகளுடன் தொடர்பில்லாத சோர்வு ஒரு அடிப்படை இதயப் பிரச்சினையைக் குறிக்கலாம்.

குமட்டல் அல்லது வியர்வை: விவரிக்க முடியாத குமட்டல் அல்லது காலை எழுந்த உடன் வியர்வை இருந்தால் அது இதயத்தின் அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் மீண்டும் மீண்டும் இருந்தால், மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

தாடை அல்லது கழுத்து வலி: தாடை அல்லது கழுத்து வலி, குறிப்பாக இடது பக்கத்தில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். குளிர்காலத்தில், இரத்த நாளங்கள் சுருங்கும்போது, அத்தகைய வலியை கவனிக்க வேண்டியது அவசியம். 

heart attack

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு: ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, படபடப்பு அல்லது மார்பில் படபடக்கும் உணர்வுகள் இருந்தால் உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கப்படக் கூடாது.

தலைச்சுற்றல்: குளிர்காலத்தில் காலை நேரத்தில் தலைச்சுற்றல் போன்ற உணர்வுகளை இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் இது மூளைக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாததைக் குறிக்கிறது. இந்த உணர்வுகளை எளிதாக நிராகரிக்கக்கூடாது.

Latest Videos

click me!