பாதங்களில் ஏற்படும் வீக்கம் இந்த நோயின் அறிகுறியா!! அலட்சியம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?

First Published | Apr 15, 2023, 10:01 AM IST

கொழுப்பு கல்லீரல் (fatty liver) நோய் எளிதில் அடையாளம் காண முடியாத நோயாகும். 

நமது உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் கல்லீரல் நோய்கள் அதிகமாகி வருகின்றன. உங்களுக்கு கல்லீரல் செயலிழப்பு அல்லது கொழுப்பு கல்லீரல் (fatty liver) நோய் இருந்தால், எடை அதிகரிப்பு மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த கொழுப்பு கல்லீரல் நோய் என்றால் என்ன? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்..

கொழுப்பு கல்லீரல் (fatty liver) பிரச்சனை நம்முடைய கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. இதை எளிதில் அடையாளம் காண முடிவதில்லை. நாம் கண்டுபிடிப்பதற்குள் இந்த பிரச்சனை 75 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தி விடுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த பிரச்சனை கண்டறியப்பட்டதும் உணவு, வாழ்க்கை முறைகளில் தேவையான மாற்றங்களை செய்வது அவசியம். 

Tap to resize

கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்

கல்லீரல் பிரச்சனைகள் அல்லது கல்லீரல் நோய்கள் இருப்பவர்களுக்கு கால் வீக்கம், மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் வடிதல் ஆகிய பிரச்சனைகள் இருக்கும். அத்தகைய அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் கல்லீரல் ஏற்கனவே 75 சதவீதம் சேதமடைந்துள்ளது. ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்படும் போதுதான் இத்தகைய அறிகுறிகள் தோன்றும். மனச்சோர்வு, வாந்தி, குழப்பம், சிறுநீரக பாதிப்பு ஆகியவை நோயின் ஆரம்பத்திலேயே காணப்படுகின்றன. 

என்ன செய்ய வேண்டும்?  

கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினசரி உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவையும் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் எடையை 15 சதவீதம் வரை குறைக்கலாம். நீங்கள் உண்ணும் உணவில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். இதன் மூலம் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கும். இது எடையைக் குறைக்கிறது. பலவீனத்தையும் நீக்குகிறது. கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு தூய்மையானது. இதில் புரதமும் அதிகம். திராட்சை, இஞ்சி, காய்கறிகள், மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் ஆகியவை கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நல்லது. 

Fatty Liver

என்ன சாப்பிடக்கூடாது? 

கல்லீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இறைச்சியை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதை உண்பது ஆரோக்கியத்திற்கு இன்னும் தீங்கானது. அனைத்து இறைச்சிகளும் இந்த வகைக்குள் வராது. சிவப்பு இறைச்சி, ஆட்டிறைச்சி, பிற அசைவ உணவுகள் கொழுப்பு கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். 

இதையும் படிங்க: கொசு கடியால் ஏற்படும் தடுப்பு சொறி! வெறும் 5 நொடிகளில் முகம் கை கால்களில் தடுப்பு மறையும்! இதை டிரை பண்ணுங்க!!

மீனில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக இருந்தாலும், கோழியில் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இரண்டையும் சாப்பிடலாம். இவற்றை உண்பது உடல் நலத்திற்கும் நல்லது. ஆனால் இவற்றில் அதிக மசாலா மற்றும் எண்ணெய் இருக்கக்கூடாது. 

ஒவ்வொருவரின் எடையைப் பொறுத்து, ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் புரதம் உடலுக்குத் தேவை என நிபுணர்கள் சொல்கிறார்கள். உங்கள் எடை 55 கிலோ என்றால், ஒரு நாளைக்கு 55 கிராம் புரதம் மட்டுமே தேவை. சைவ உணவு அல்லது அசைவ உணவுகளில் எதில் அந்த புரதத்தை உண்ண போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். நாம் உணவு விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டால் உடலில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை குறையும். கால் வீக்கம், வயிற்றில் நீரால் ஏற்படும் அசௌகரியங்களும் மறையும். பிரச்சனை அதிகமாக இருந்தால் மருத்துவமனைக்கு செல்வது நல்லது. 

இதையும் படிங்க: வெற்றிலையை பற்றி நாம் அறியாத பல மருத்துவ பயன்கள்! தலைமுடி முதல் உடல் முழுக்க, 1 வெற்றிலையால் இத்தனை நன்மைகள்!

Latest Videos

click me!