diabetes
The Lancet Diabetes and Endocrinology இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நமது மக்கள்தொகையில் 11.4% ஆகும்.
diabetes
இதன் மூலம் அதிக நீரிழிவு நோயாளிகளை கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. நீரிழிவு நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 மாநிலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
diabetes
கோவா : நீரிழிவு நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. கோவாவில் 26.4% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி :நமது அண்டை மாநிலமான புதுச்சேரி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. புதுச்சேரியில் 26.3% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
diabetes diet
கேரளா : இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருப்பது நமது மற்றொரு அண்டை மாநிலம் கேரளா. அங்கு 25.5% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிகர் : 20.4% பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதால் இந்த பட்டியலில் சண்டிகர் 4-வது இடத்தில் உள்ளது.
diabetes foods
டெல்லி : இந்த பட்டியலலில் தலைநகர் டெல்லி 5-வது இடத்தில் உள்ளது. அங்கு 17.8% பேருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது.
diabetes diet
தமிழ்நாடு : இந்தியாவில் அதிக சர்க்கரை நோயளிகள் கொண்ட பட்டியலில் தமிழ்நாடு 6-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 14.4% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் : இந்த பட்டியலில் 7-வது இடத்தில் இருப்பது மேற்கு வங்கம். இங்கு 13.7% பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது.
சிக்கிம் : சிக்கிம் இந்த பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. சிக்கிமில் 12.8% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
diabetes
பஞ்சாப் : இந்த பட்டியலில் பஞ்சாப் 9-வது இடத்தில் உள்ளது. பஞ்சாபில் 12.7% பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது.
ஹரியானா : இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது ஹரியானா. ஹரியானாவில் 12.4% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.