பருப்பு வகைகளை நாம் உண்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது. பெரும்பாலான பருப்பு வகைகளில் நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே. தாமிரம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளன. இது விந்துணு குறைபாடுள்ளவர்களுக்கு பெரும் வரப்பிராசதமாக அமையும். ஆண்களுக்கு விந்தணு பாதிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணிகளில் ஒன்று உணவுமுறை. சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதால், விந்துணுக்களின் தரம் மற்றும் ஆண்மை பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது. ஆன்மை குறைபாட்டை உணவு முறையுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் போது, மரத்தில் விளையும் பொருட்களில் இருந்து கிடைக்கும் கொட்டைகள், பாதாம், ஹேசல்நட்ஸ் மற்றும் அக்ரூட் பருப்பு வகைகள் உள்ளிட்டவை விந்தணுக்களின் உயிர்சக்தி இயக்கத்துக்கும் மற்றும் செயலாக்கத்துக்கும் பெரியளவில் காரணமாக உள்ளது. இந்நிலையில் முந்திரியின் பயன்பாட்டும் விந்தணுக்களின் உற்பத்திக்கு பெரும் வலைமை சேர்க்கிறது.