Egg : பச்சை முட்டையை குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதா? கெட்டதா?

First Published Sep 19, 2022, 6:24 PM IST

உடல் ஆரோக்கியத்தில் எப்போதுமே முட்டைக்கு என தனியிடம் உண்டு. ஏனெனில், உடல் நலனை மேம்படுத்த முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூட அறிவுரை வழங்குகின்றனர். அந்த அளவுக்கு உணவில் முட்டையின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
 

பச்சை முட்டை 

முட்டையில் பலரது விருப்பமும் ஆஃப் பாயில் எனப்படும் ஆம்ப்ளேட் தான். ஒரு சிலரோ தினமும் காலையில் பச்சை முட்டை குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். இது நல்லதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. உண்மையில் பச்சை முட்டையில் உள்ள திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. வேகவைக்காத முட்டையில் 10% புரதமும், 90% நீரும் உள்ளது. இதனுடன் பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், சோடியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.

மஞ்சள் கரு

முட்டையின் உள்பகுதியான மஞ்சள் கருவில் இரும்பு, துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல வைட்டமின்கள் உள்ளது. முட்டையில் இருக்கும் வைட்டமின்கள் இதயம், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கிறது. முட்டையை வேக வைத்து சாப்பிட்டால் தான் பலன்கள் கிடைக்கும்.

Saffron Benefits : சிவப்பு தங்கம் ''குங்கும்ப்பூ''-வின் நன்மைகள் Vs தீமைகள்!

பச்சை முட்டையில் இருக்கும் திரவமானது, நம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. முட்டையை அப்படியே உடைத்து சாப்பிடுவதால், உள்ளிருக்கும் வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.

அறிகுறிகள்

பச்சை முட்டையை சாப்பிட்டால் சருமம் சிவத்தல், அரிப்பு, வீக்கம், வயிற்று போக்கு மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். முட்டையில் உள்ள வெள்ளை நிற திரவத்தை சாப்பிடுவது சிலருக்கு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள அல்புமினை உட்கொள்ளும்போது, உடல் பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாக அமைகிறது. இதனால், தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Wheat Noodles : குழந்தைகளுக்கான ஹெல்த்தியான டேஸ்ட்டியான ''கோதுமை நூடுல்ஸ்''!

முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீங்கு விளைவிக்கும். கோழிகளின் குடல் பகுதியில் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா காணப்படும். இது முட்டை ஓட்டின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பரவி இருக்கும். சால்மோனெல்லாவை நீக்க வேண்டுமெனில் அதிக வெப்பநிலையில் முட்டையை வேக வைக்க வேண்டியது அவசியம். அதனை விடுத்து முட்டையை அப்படியே குடிப்பதால் பாக்டீரியாக்களால் பாதிப்பு நேரிடும்.

click me!