சிறுநீரகம் என்பது நம்முடைய உடலில் ரொம்பவே முக்கியமான உறுப்பாகும். எனவே அதை பத்திரமாக பார்த்துக் கொள்வது நம்முடைய கடமை. ஆனால் சில சமயங்களில் நமக்கே தெரியாமல் நாம் நிறைய விஷயங்களை செய்கிறோம். அதன் விளைவாக சிறுநீரகங்கள் மோசமாக சேதமடைகின்றன. அப்படி என்னென்ன விஷயங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
24
தினமும் வலி நிவாரணைகளை எடுத்துக் கொள்ளுதல் :
தலைவலி முதல் கால் வலி வரை போன்ற சின்ன சின்ன விஷயத்திற்கு கூட பலர் தினமும் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஸ்டெராய்டல் அல்லாத அலர்ஜி எதிர்ப்பு மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வலி நிவாரணிகளை அரிதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் பாதுகாப்பானது. அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆபத்தானது. மேலும் வலி நிவாரணிகளை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்கள் மன அழுத்தம் மற்றும் பிற உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய அடிக்கடி சிறுநீரக செயல்பாட்டை பரிசோதிப்பது நல்லது.
34
மூலிகை சப்ளிமெண்ட்கள் :
மூலிகை சப்ளிமெண்ட்கள் பாதுகாப்பானது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. ஏனெனில், சில சப்ளிமெண்ட்களில் பாதரசம், ஈயம் அல்லது ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் இருக்கும். அவை சிறுநீரகங்களில் நச்சுக்களை குவித்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். எனவே உங்களது சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் மூலிகை சப்ளிமென்ட் களையும் எடுப்பதற்கு முன் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. முக்கியமாக உரிமம் பெறாத தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் சப்ளிமெண்ட்களை எடுப்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரையானது சிறுநீரக நோய்களுக்கு முக்கியமான காரணமாக அமைகிறது. ஆம், நிபுணர்களின் கூற்றுப்படி நீடித்த மற்றும் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரையானயானது சிறுநீரக நோய்க்கான ஆபத்தை பெரிதும் அதிகரிக்க செய்யும் என்கின்றனர். எனவே சிறுநீரகங்கள் சேதமடைவதை தவிர்க்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது ரொம்பவே முக்கியம். இதற்கு வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.