உடற்பயிற்சியை விட பவர்ஃபுல்!! தொப்பையை குறைக்கும் '5' வீட்டு வேலைகள் தெரியுமா? 

Published : May 07, 2025, 08:35 AM ISTUpdated : May 07, 2025, 08:41 AM IST

உடலில் தேவையில்லாத கொழுப்பை குறைக்க உதவும் 6 எளிய வீட்டு வேலைகள் குறித்து இங்கு பார்ப்போம்.  

PREV
17
உடற்பயிற்சியை விட பவர்ஃபுல்!! தொப்பையை குறைக்கும் '5' வீட்டு வேலைகள் தெரியுமா? 
Five Household Tasks Helps Lose Weight Easily

உடல் எடையை குறைக்க உணவு பழக்கம் மட்டுமின்றி உடற்பயிற்சிகளும் அவசியம். இதற்காகவே பலர் பெரும்பாலும் ஜிம் செல்ல தொடங்குகின்றனர். சிலர் கடுமையான டயட்டை பின்பற்றுகின்றனர். ஆனால் சிறிய விஷயங்கள் மூலம் கூட உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும் என்பது மக்களுக்கு தெரியவில்லை.  இந்த பதிவில் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் வீட்டு வேலைகள் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பது குறித்து காணலாம். 
 

27
சுத்தம் செய்தல்

பொதுவாக வீட்டை சுத்தப்படுத்துவது அதிக உடல் உழைப்பு கோரும் செயல்பாடாகும். நம்முடைய சுற்றுச்சூழல் சுத்தமாக இருப்பது நமது மனநிலையை மேம்படுத்தும். அதே சமயத்தில் வீட்டிலுள்ள பொருட்களை அடுக்கி வீட்டை சுத்தப்படுத்துதல், தரையைத் துடைப்பது உடலுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். இது தவிர துணி துவைப்பது, பாத்திரங்களை சுத்தம் செய்வது, அழுக்கு படிந்த இடங்களை துடைத்து சுத்தம் செய்வது போன்றவை உங்களுடைய உடலை நன்கு இயங்கச் செய்யும். இதனால் அதிகமான கலோரிகள் எரிக்கப்படும். 

37
செலவாகும் கலோரிகள்:

வெறும் 30 நிமிடங்களில் கிட்டத்தட்ட 100-150 கலோரிகளை எரிக்கலாம். கையால் துணிகளைத் துவைத்தால் 30 நிமிடங்களில் 120-150 கலோரிகள் செலவாகும். இது உடலுக்கு சூப்பரான பயிற்சியாகும். 

47
படிக்கட்டுகளில் ஏறுதல்

லிப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது கீழ் உடலை வலுப்படுத்தும். உங்களுடைய கால்கள், இடுப்பு பகுதிகளை பலப்படுத்த படிக்கட்டுகளில் நடப்பது பயன்தரும். இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.  நீங்கள் தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் கிட்டத்தட்ட 200 முதல் 300 கலோரிகளை எளிதாக எரிக்க முடியும் என கூறப்படுகிறது. 

57
தோட்டக்கலை

உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் தோட்டத்தை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, களைகளை நீக்குவது, தொட்டிகளுக்கு மண் மாற்றுவது, மண்ணைத் தோண்டுவது போன்ற செயல்களை செய்யுங்கள்.  இதனால் உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருப்பதோடு கணிசமான கலோரிகளும் எரிக்கப்படும். 

67
விளையாடுதல்

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் விளையாடுவது பொழுதுபோக்கு மட்டுமல்ல; உடலுக்கும் நல்ல செயல்பாடாக இருக்கும்.  குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடுவது, ஒளிந்து விளையாடுவது, நடனம் ஆடுவது போன்றவை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் 300 கலோரிகள் வரை எரிக்க உதவுகிறது. 

77
பேசிக் கொண்டே நடத்தல்:

நீங்கள் தொலைபேசியில் ரொம்ப நேரம் பேசுபவராக இருந்தால், நடந்து கொண்டே பேசுவதை பழக்கப்படுத்துங்கள். அமர்ந்த நிலையில் பேசுவதை விட நடந்தபடி பேசுவது உங்களுடைய கலோரிகளை அதிகமாக எரிக்க உதவும். சுமார் 30 நிமிடங்கள் நடக்கும் போது 100 முதல் 150 கலோரிகளை எரிக்க முடியும்

Read more Photos on
click me!

Recommended Stories