மாவிலையை நீரில் கொதிக்க வைத்து கசாயம் தயாரித்துப் அருந்தினால் தொண்டை வலி, இருமல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.
தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கும் மாவிலை முற்றுப்புள்ளி வைக்கும். இளநரையை ஏற்படாமல் தடுப்பதுடன் ஊட்டச்சத்துகள் பெருகவும் வழிவகுக்கும்.
மாமரத்தின் இலைகள் வயிற்றுப் புண்ணைப் போக்கும் அரிய மருந்தாக பயன்படுகிறது. மாவிலை நீரை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும்.
புற்றுநோய்யை எதிர்க்கும் வல்லமை கொண்டது மாவிலை. புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சைக்கு அளிப்பதில் மாவிலை மிகவும் பலன் கொடுக்கக்கூடியது.
நீரிழவு நோய் உள்ளவர்களும் மாவிலையை வேக வைத்து உள்கொள்ளலாம். இரத்தத்தில் சர்க்கரையை சரியான அளவில் பராமரிக்க இது உதவும்.
இரத்த அழுத்தம் உள்ளவர்களும் மா இலை சாற்றைப் பருகலாம். நரம்புகளைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மாவிலை நீர் பயன்படும்.
வெந்த மாவிலையில் இருந்து சாறு பிழைந்து நீர் சேர்த்து குடிக்கலாம். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்கு கைகொடுக்கும் நல்ல மருந்தாக இருக்கும்.