மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இதை படிங்க..!!

First Published | May 5, 2023, 11:20 AM IST

மூளையில் உள்ள ரத்த நாளம் வெடிக்கும் போது மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம் மூளை பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மூளையில் ஒரு நரம்பு தடைபட்டால், பக்கவாதம் ஏற்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தான நிலையாகும், இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும். ஆனால் மினி மூளை பக்கவாதம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இது ஒரு பெரிய தாக்குதலுக்கு முன் நிகழ்கிறது. அதன் அறிகுறிகள் லேசானவை, முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் பெரிய தாக்குதலைத் தடுக்கலாம். 
 

சிறிய பக்கவாதம் எப்போது ஏற்படுகிறது?

மூளை பக்கவாதம் போன்று, மூளையில் உள்ள இரத்தக் குழாயின் அடைப்பு காரணமாக ஒரு சிறிய மூளைத் தாக்குதல் ஏற்படுகிறது. இதனால் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைப்படுகிறது. ஆனால் இந்த பாதிப்பு நிரந்தரமானது அல்ல, 24 மணி நேரத்திற்குள் தானாகவே குணமாகும். எனவே அதன் அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மாறாக, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

Latest Videos


மினி ஸ்ட்ரோக் அறிகுறி:

முகம், கைகள் அல்லது கால்களில் உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை அல்லது பலவீனம் திடீர் குழப்பம், திடீரென பேசுவதில் சிரமம், திடீரென உடல் சமநிலை இழப்பு, திடீரென நடப்பதில் சிரமம், தலைச்சுற்றல், கடுமையான தலைவலி, உணவு விழுங்குவதில் சிரமம் போன்றவை ஆகும்.
 

மினி மூளை பக்கவாதம்:

மினி மூளை பக்கவாதம் இரத்த நாளங்களில் இரத்த உறைவு காரணமாக ஏற்படுகிறது. இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்தம் தடைப்படுகிறது. மேலும் இந்த இரத்தக் கட்டிகள் தற்காலிகமானவை மற்றும் எந்நேரத்திலும் கரைந்துவிடும். ஆனால் இந்த நிலையை புறக்கணிக்கப்படக்கூடாது.

மினி ஸ்ட்ரோக்கை தவிர்க்க டிப்ஸ்:

புகைபிடிப்பது மது அருந்துவதை நிறுத்த வேண்டும்

பழங்கள், காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை சாப்பிட வேண்டும்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கொழுப்பு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்.

சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூளை பக்கவாதம் தடுப்பு உணவுகள்:

மூளை பக்கவாதம் ஏற்படாமல் இருக்க குறைந்த கொழுப்பு, குறைந்த உப்பு,  நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இவை உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. இது மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. 

இதையும் படிங்க: இறந்தவர்களின் ஆடைகளை நாம் அணியக்கூடாது? ஏன் தெரியுமா?

பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, ஆப்பிள், வாழைப்பழம், கேரட், பீட்ரூட், ப்ரோக்கோலி, கீரை, தக்காளி, பருப்பு வகைகள், கிட்னி பீன்ஸ், சோல், குயினோவா, ஓட்ஸ், பாதாம், சியா விதைகள், கிழங்கு போன்றவை.

click me!