இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு சில நோய்களை கண்டறிந்து அதற்க்கான மருந்துகளை வாங்கி எடுத்துக் கொள்வோம்.
ஆனால் 1 சில நோய்கள் எப்போது வருமென்றே நமக்கு தெரியாது. ஆனால் இது வந்து விட்டால் ஒரு சில நிமிடங்களிலில் உயிரை பறித்து விடும் அளவிற்கு அபாயகரமான ஒன்று என்றே கூறலாம். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
தற்போதைய சூழலில் சிறு வயதில் கூட ஏற்படக் கூடிய ஒரு நோய் எனில் அது மாரடைப்பு தான். இது எப்போது வரும் என்றே சொல்ல முடியாத அளவில் இதன் தாக்கம் இருக்கிறது. இதனை தடுப்பதர்க்கு என்று எந்த மருந்தும் இல்லையென்றாலும் நமது வாழ்வியல் முறை மூலமாக இந்த அட்டாக் வருவதை தடுக்க முடியும். மேலும் இதன் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொண்டால் ,உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துகொண்டால் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.
heart attack
சைலண்ட் ஹார்ட் அட்டாக்:
ஒரு சிலருக்கு எந்த வித இதயம் சார்ந்த பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் கூட சைலண்ட் அட்டாக்கால் உயிரிழப்பது ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதன் அறிகுறிகள் சாதாரணமாக இருந்தாலும் , அதனை எளிதாக எடுத்துக் கொள்வதே உயிரிழப்புக்கு வகிக்கின்றன. இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக்கிற்கு எந்தவித அறிகுறியும் இல்லையென்பதை நிதர்சனமான உண்மை .
ஆய்வு சொல்வது என்ன?
அமெரிக்க மருத்துவ சங்க இதழும் ஹார்வர்ட் ஹெல்த் இந்த இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வின் படி 45 வயது முதல் 85 வயதுக்குட்பட்ட 2000திற்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது எந்த ஒரு இருதய நோயும் இல்லாமல் சைலன்ட் அட்டாக்கால் இறந்து போனது தெரிய வந்துள்ளது.
அதிலும் குறிப்பிட்டு சொன்னால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதே தெரியாமல் தான் இறக்கின்றனர்.
அதாவது சைலண்ட் ஹார்ட் அட்டாக்கானது 10 ஆண்டுகளுக்குள் பல்வேறு சமயங்களில் ஏற்பட்டு இறுதியில் இறந்து விடுகின்றனர்.
இறந்தவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளது.
சைலண்ட் ஹார்ட் அட்டாக் காரணிகள்
இதற்கான காரணங்களை ஆராயும்போது பொதுவாக கூறப்படும் காரணங்களே சைலண்ட் ஹார்ட் அட்டாக்குக்கும் கூறப்பட்டுள்ளது .
சர்க்கரை வியாதி, அதிக உடல் எடை , உயர் இரத்த அழுத்தம், முதுமை, புகைபிடிப்பது,மது அருந்துவது, உழைப்பில்லாத வாழ்வு, முன்னோர்களுக்கு முன்பே இருந்த இதய நோய் இருப்பது, அதிக கொழுப்பு போன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் கூறப்படுகின்றன.
அறிகுறிகள் என்ன?
மார்பில் சிறிய அளவிலான வலி, அசாதாரணமான 1 உணர்வு ஏற்படுதல், தீடீரென்று உடல் சோர்வாக இருத்தல், தீடீர் மயக்கம், கழுத்திலிருந்து முதுகு வரை வலி, கைகள் மற்றும் தோள்களில் வலி அல்லது அசாதாரணமான உணர்வு ஏற்படுதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் உயிரிழப்பை தடுக்க முடியும்.
நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? அதற்கான காரணம் இதோ..!!
மாரடைப்பை தடுப்பது எப்படி?
வாழ்வியல் முறையை மாற்றுவதன் மூலமாக மாரடைப்பை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.முறையான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி , சரியான அளவிலான தூக்கம், புகையிலை பிடிப்பதாய் நிறுத்துதல், மது அருந்துவதை நிறுத்துதல் , ஆரோக்கியமான உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்ளுதல் குறைந்த அளவிலான எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் இந்த மாரடைப்பை தடுக்க முடியும்.