கேன்சர் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பதில் நமது உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபைட்டோகெமிக்கல்கள், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன உணவுகள் என்று பார்ப்போம்.
கேன்சர் அபாயத்தைக் குறைப்பதில் உணவுமுறைக்கு பெரிய பங்கு உண்டு. சில உணவுகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபைட்டோகெமிக்கல்கள், நார்ச்சத்து போன்றவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. உங்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சில உணவுகள் இங்கே பார்க்கலாம்.
29
பூண்டு
பூண்டில் 'அல்லிசின்' என்ற சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பூண்டை தொடர்ந்து சாப்பிடுவது, உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும். வயிறு, குடல் மற்றும் ப்ராஸ்டேட் கேன்சர் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
39
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் ஆந்தோசயனின், எலாஜிக் அமிலம் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை டி.என்.ஏ சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாத்து, கேன்சர் செல்கள் பரவுவதைத் தாமதப்படுத்துகின்றன. உணவுக்குழாய், குடல், மார்பகப் புற்றுநோய் அபாயத்தை இவை குறைக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன.
தக்காளியில் லைக்கோபின் நிறைந்துள்ளது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தைக் கொடுப்பதுடன், ப்ராஸ்டேட், நுரையீரல், வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது. தக்காளியை சமைத்துச் சாப்பிடும்போது, உடல் லைக்கோபினை அதிகமாக உறிஞ்சிக்கொள்ளும்.
59
பிரக்கோலி
பிரக்கோலியில் சல்ஃபோராபேன் என்ற சத்து ஏராளமாக உள்ளது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மார்பகம், ப்ராஸ்டேட், குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க சல்ஃபோராபேன் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் உள்ள அதிக நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
69
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் ஃபோலேட், கரோட்டினாய்டுகள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை டி.என்.ஏ சேதத்திலிருந்து பாதுகாத்து, கட்டி வளர்ச்சியைத் தாமதப்படுத்த உதவுகின்றன. மார்பகம், தோல், வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இந்த காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
79
பாதாம்
வால்நட், பாதாம் போன்ற நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், செலினியம், பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளன. குடல், மார்பகம் மற்றும் கணையப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
89
கிரீன் டீ
கிரீன் டீயில் கேட்டசின்கள் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை செல் சேதத்தைத் தடுத்து, கேன்சர் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்க உதவுகின்றன. கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பது மார்பகம், கல்லீரல், ப்ராஸ்டேட் கேன்சர் அபாயத்தைக் குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
99
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கி, கட்டி உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மார்பகம், ப்ராஸ்டேட், நுரையீரல், குடல் புற்றுநோய்களுக்கு எதிராக குர்குமின் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.