Heat pumps: அடிக்குற வெயிலுக்கு சூட்டுக் கொப்புளம் வருதா? இந்த பாட்டி வைத்தியத்த செய்தால் உடனே போய்டும்..!

First Published | May 19, 2023, 5:33 PM IST

கோடைகால வெயிலில் ஏற்படும் சூட்டு கொப்புளங்கள் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் விரைவில் குணமாக பாட்டி வைத்திய முறைகளை இங்கு காணலாம். 

சூட்டு கொப்புளங்கள் வந்தால் நம்முடைய சருமத்தில் எரிச்சல், தடிப்பு, வீக்கம் போன்றவை ஏற்படும். இவை நமது அக்குள், மார்பு பகுதி, முதுகு, கால்களுக்கு இடையில் தான் பெரும்பாலும் வரும். குறிப்பிட்டு இந்த பகுதிகளில் வருவதற்கு அங்கு உடலின் சூடு அதிகமாக காணப்படுவதை காரணம். இந்த சூட்டு கொப்புளங்களை குணப்படுத்த பாட்டி வைத்திய முறைகள் சிலவற்றை பின்பற்ற வேண்டும். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. 

சூட்டு கொப்புளங்களை குணப்படுத்த நம்முடைய உடலில் சூட்டை தணிப்பது அவசியம். குளிர்ந்த நீரில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் குளியுங்கள். உங்கள் வீட்டில் ஷவர் இருந்தால் அதில் கொஞ்ச நேரம் குளிப்பதையும் பழக்கப்படுத்துங்கள். கொப்புளங்களால் பாதிப்படைந்த பகுதியை குளிர்ந்த நீரால் இதமடைய செய்ய வேண்டும் இப்படி தினமும் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது சூட்டு கொப்புளங்கள் விரைவில் குணமாகும். 

Tap to resize

பாட்டி வைத்தியம் 

தேங்காய் எண்ணெய் - 2 முதல் 3 ஸ்பூன், வெள்ளரிக்காய் சாறு ஆகியவை எடுத்து கொள்ளுங்கள். 

எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? 

வெள்ளரிக்காவை துருவி அதனை சாறாகப் பிழிந்து, அதனுடன் தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொப்புளங்களால் பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி 20 முதல் 30 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி காட்டன் துணியால் துடைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் கொப்புளங்கள் ஏற்படுத்தும் எரிச்சல் குறையும். 

ஐஸ் கட்டி வைத்தியம் 

ஒரு ஜிப்லாக் கவர், 4 ஐஸ் கட்டி துண்டுகள், ஒரு சின்ன டவல் ஆகியவை எடுத்து கொள்ளுங்கள். 

* முதலாவதாக ஜிப்லாக் கவரில் ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஐஸ்கட்டிகளை கையில் வைத்திருப்பது சிரமம். ஆகவே சிறிய துண்டில் ஐஸ் கவரை வைத்து கொப்புளங்களால் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுங்கள். விரைவில் குணமாகும். 

​கற்றாழை ஜெல் 

குளிர்ச்சி தன்மை கொண்ட கற்றாழை ஜெல், ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகளை கொண்டுள்ளது. இதனை கொப்புளங்களால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். இதை கழுவ தேவையில்லை. அப்படியே கூட விடலாம். ஒரு நாளிக் 3 முதல் 4 முறை செய்வதால் சூட்டு கொப்புளம் இருந்த இடன் தெரியாமல் போய்விடும். 

​சோள மாவு 

ஒரு ஸ்பூன் சோள மாவு, கால் டம்ளர் வெந்நீர் ஆகியவை எடுத்து கொள்ளுங்கள். குளிர்ந்த நீரில் குளித்த பிறகு கொப்புளங்கள் பாதித்த இடத்தை சுத்தமாக துடைத்து விட்டு, வெந்நீரில் கலந்த சோளமாவை கொப்புளங்கள் மீது பூசுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளுங்கள். 

வேப்பிலை 

ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவை எடுத்து கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து கொஞ்சம் நீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து கொப்புளங்களின் மீது பூசுங்கள் ஒரு நாளுக்கு இரண்டு முறை இப்படி செய்து வர சூட்டு கொப்புளங்கள் விரைவில் குணமாகும். 

Latest Videos

click me!