மூல நோய் இருப்பவர்கள் நிம்மதியாக ஒரு வேலையும் செய்ய முடியாது. மலம் கழிப்பதை நினைத்தாலே வலியும், அருவருப்பும், ரத்தக்கசிவு குறித்த ஒவ்வாமையும் ஏற்பட்டு வரும். ரொம்ப நாளாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் மூலநோய் வர வாய்ப்புள்ளது. இந்த நோய்க்கு சில அறிகுறிகள் உள்ளன. குத பகுதியில் அரிப்பு, வலி போன்றவை ஏற்படும். குடல் இயக்கத்தில் குறைபாடும், ரத்தக்கசிவும் இருக்கும். இந்த நோய் ஏற்பட சில காரணங்கள் உள்ளன.