High Blood Sugar Symptoms : சுகர் நோயாளிகளே! இந்த 'அறிகுறிகளை' கவனிங்க; சர்க்கரை அளவு 'அதிகமா' இருக்குனு அர்த்தம்

Published : Jan 03, 2026, 06:30 PM IST

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் பலவிதமான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. பலருக்கும் இது வெவ்வேறு விதமாக வெளிப்படும். அந்த அறிகுறிகளின் பட்டியல் இங்கே..

PREV
15
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுதல்

அவ்வப்போது சிறுநீர் கழிப்பது இயல்பானது என்றாலும், அது அதிகமாக இருந்தால் கவனம் தேவை. இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இதுபோன்று நிகழ்கிறது.

25
உடல் எடை குறைதல்

நன்றாக சாப்பிட்டும் உடல் எடை குறைந்தால் கவனமாக இருக்க வேண்டும். இது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாகும்.

35
சோர்வாக உணர்தல்

எப்போதும் சோர்வாக உணர்வதும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். தொடர்ந்து சோர்வு ஏற்பட்டால் கவனம் தேவை.

45
மங்கலான பார்வை

தொடர்ச்சியான தலைவலி, மங்கலான பார்வை ஆகியவை இரத்த சர்க்கரை அதிகரித்ததற்கான அறிகுறிகளாகும். இதுபோன்ற சமயங்களில் சிறப்பு கவனம் தேவை.

55
சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது சருமத்தில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அசாதாரண மாற்றங்களைக் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகத் தயங்க வேண்டாம்.

Read more Photos on
click me!

Recommended Stories