விந்தணுல பிளாஸ்டிக் துகளா? ஆண்களே இனி சாப்பிடும்போது கூட கவனமா இருங்க..! ஆய்வில் ஷாக் தகவல்!!

First Published Mar 29, 2023, 11:25 AM IST

ஆண்களின் விரைப்பை, விந்தணுவில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் (microplastic) இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 

எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கலந்துவிட்ட இந்த தலைமுறையில், ஆண்களின் விந்தணுவையும் பிளாஸ்டிக் விட்டு வைக்கவில்லை. ஆண்களின் அடிமடியில் கைவைத்துள்ள இந்த விவகாரம் குறித்த முழுவிவரங்கள் தெரிந்தால் ஆடிபோய்விடுவீர்கள்.

இதுவரையிலான பல்வேறு கட்ட ஆய்வுகளில் பெண்ணின் கருப்பை, தாய்ப்பால், ரத்தம், தொப்புள் கொடியில் பிளாஸ்டிக் துகள் இருப்பதாக தெரிய வந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத நிலையில், ஆண்களின் விரைப்பை, விந்தணுவில் பிளாஸ்டிக் துகள் இருக்கலாம் என்கிறது அண்மையில் செய்த ஆய்வுகள். இந்த தகவல்களை Science Direct என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. 

அதில் வெளியான ஆய்வில் 6 விரைப்பைகள், 30 விந்து மாதிரிகள் ஆராயப்பட்டன. பைரோலிசிஸ்-கேஸ் குரோமடோகிராபி/மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (பை-ஜிசி/எம்எஸ்) மற்றும் லேசர் டைரக்ட் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (எல்டி-ஐஆர்) ஆகிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனை முடிவுகளில் விந்தணுவில் சராசரியாக 0.23 ± 0.45 particles/mL பிளாஸ்டிக் துகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 

இதையும் படிங்க: செக்ஸ் இல்ல வேற... ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்!!

என்ன மாதிரியான பிளாஸ்டிக் மாதிரிகள் அதில் கிடைக்கப்பெற்றன? இவற்றில் பாலிஸ்டிரீன், பாலி எத்திலீன், பாலிவினைல் குளோரைடு ஆகியவை அதிகமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. சரி, இந்த பொருள்கள் எப்படி அந்தரங்க உறுப்புக்குள் சென்றிருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதா? நாம் உண்ணும் உணவு பொட்டலங்களில் இருந்துதான். அதாவது பாலிஸ்டிரீன் என்ற பொருள் உணவுப் பொட்டலங்களிலும், பாலி எத்திலீன் பிளாஸ்டிக் பைகளிலும், பாலிவினைல் குளோரைடு நாம் அருந்தும் தண்ணீர் குழாய்களில் இருக்கிறது. இப்போது புரிகிறதா? எல்லாம் பிளாஸ்டிக் மயமானதால், நம் உடலுக்குள்ளும் பிளாஸ்டிக் துகள் இருக்கின்றன. 

முந்தைய ஆய்வுகளில் எலிகளின் விரைப்பைகளில் பாலிஸ்டிரீனால் இருப்பதும், அதன் ஆபத்துகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில், மனிதர்களின் விந்து, விரைப்பையில் பிளாஸ்டிக் தாக்கம் குறித்த ஆய்வுகள் அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க: மூட்டு இடுப்பு வலி நொடியில் காணாமல் போக வேண்டுமா?

click me!