பலாப்பழத்தின் பயன்கள்
நரம்புகள் வலுவடையும்
பலாச்சுளைகளைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மண் சட்டியில் போட்டு பசும்பால் ஊற்றி ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு தேன், நெய் மற்றும் ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புகள் வலுவடையும்.
அடிக்கடி பலாப்பழத்தை சாப்பிட்டு வருவது நம் உடலுக்கு மிகச் சிறந்த பலனைத் தரும். இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கிறது. மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
கண் நோய்க்கு தீர்வு
பலாப்பழத்தைத் அடிக்கடி தொடரந்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
பலாப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாப்பதோடு, பெருங்குடலையும் சுத்தம் செய்ய உதவி புரிகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
அடிக்கடி நோய் தாக்கி அவதிக்கு உள்ளாகும் நவர்கள், பலாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறுநீரக குழாய் புற்றுநோய்
பாக்டீரியாவினால் உண்டாகும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு, 5 நாட்களுக்கு 2 வேளை என பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் இந்த நோய் தீரும்.
jack fruit
மாரடைப்பைத் தடுக்கும்
பலாப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்திருப்பதால், குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவி செய்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. எனவே, இதய நோயாளிகளுக்கு பலாப்பழம் மிகச் சிறந்த உணவாகும்.
பலாப்பழத்தில் உள்ள லிக்னன்ஸ் மற்றும் ஆர்கானிக் கூட்டுத் தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ் மற்றும் சபானின் ஆகியவை புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது தவிர, உடலின் இளமைத் தோற்றத்தைப் பெற உதவுகிறது.