Laughing: கவலைகளை மறக்கச் செய்யும் சிரிப்பின் நன்மைகள் இதோ!

Published : Feb 27, 2023, 04:29 PM IST

கவலை இருந்தாலும் அதனை முறையாக கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும். கவலைகள் வரும் போகும். ஆனால், அதற்கெல்லாம் நாம் ஒருபோதும் சோர்ந்து விடக் கூடாது.

PREV
15
Laughing: கவலைகளை மறக்கச் செய்யும் சிரிப்பின் நன்மைகள் இதோ!

இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் உலகில் யார் கவலை இல்லாமல் இருக்கிறார்கள். கவலை இருக்கும் நேரத்தில், மனம் நிம்மதி இல்லாமல் இருக்கும். இதுவே பல நோய்கள் நம்மைத் தாக்க வழிவகுத்து விடும். ஆகையால், கவலை இருந்தாலும் அதனை முறையாக கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும். கவலைகள் வரும் போகும். ஆனால், அதற்கெல்லாம் நாம் ஒருபோதும் சோர்ந்து விடக் கூடாது.
 

25

கவலைகள் நிறைந்த மனிதன்

உலகில் கவலை இல்லாத மனிதன் யார் என்று கூறினால், அது பிறந்த குழந்தை மட்டும் தான். மற்றபடி அனைவருக்குமே வாழ்வில் இன்பம் இருப்பது போல் துன்பமும், சோர்வும், அதிருப்தியும் இருக்கவே தான் செய்கிறது. இதனால் எந்நேரமும் அதைப் பற்றியே எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், நமது உடலும் மனமும் சோர்வாகி விடும். மனம் நிம்மதி இல்லாமல் இருந்தால் பல நோய்கள் நம்மை எளிதில் தாக்கி விடக் கூடும்.

35
Image Credit: Anushka Sharma Instagram

அதிக கவலையால் உண்டாகும் நோய்கள்

மனம் நிம்மதி இல்லாமல் கவலையுடன் இருந்தால், இரத்த அழுத்தம் உண்டாகும்.

உடலும், மனமும் அதன் பலத்தை இழந்து விடும்.

நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி விடும்.

இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

45

கவலையைப் போக்கும் மருந்து

கவலையைப் போக்கும் ஒரு அற்புத மருந்து உண்டென்றால், அது சிரிப்பு தான். வெறுமனே கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அது நம்மை விட்டு அகலாது. அதிலிருந்து மீண்டு வர நாம் என்ன செய்ய வேண்டுமோ, அதனை உடனே செய்ய வேண்டும். நீங்கள் கவலையாக இருக்கும் நேரங்களில், நன்றாக சிரிக்க முயற்சி செய்ய வேண்டும். கவலையாக இருக்கும் நேரங்களில் சிரிப்பது கொஞ்சம் கடினம் தான் என்றாலும், நாம் சிரிக்க முயற்சி செய்தே ஆக வேண்டும். கவலைகளை மறப்பதற்கு உங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடலாம். உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர்களுடன் உரையாடலாம். உங்கள் மனதை வேறு ஏதாவது விஷயங்களில் திசை திருப்பலாம்.

55

சிரிப்பின் நன்மைகள்

சிரிப்பது ஒரு மகிழ்ச்சியான உணர்வாகும். சிரிப்பதால் வயிறு மற்றும் மார்பு போன்ற இடங்களில் இருக்கும் தசைகளுக்கு ஓய்வு கிடைக்கும்.

அடிக்கடி சிரிப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 

மனிதனை மனிதனாக வாழ வைப்பதற்கு, சிரிப்பு தான் மிகவும் உதவுகிறது. நல்வாழ்வு வாழ வழி செய்கிறது. ஆகவே உங்களுக்குள் இருக்கும் கவலைகளை மறந்து சிரியுங்கள். சிரிப்பு உங்களை மிகச் சிறப்பாக வாழ வைக்கும்.

click me!

Recommended Stories