Healthy Breakfast Ideas : 60 வயதிலும் சுறுசுறுப்பா இருக்கனுமா? 'தினமும்' காலைல இதை சாப்பிடுங்க

Published : Dec 09, 2025, 11:14 AM IST

60 வயதிலும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க தினமும் காலையில் சாப்பிட வேண்டிய சில உணவு வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Healthy Breakfast Ideas for Seniors

பொதுவாக வயதாகும்போது ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படும், உடலில் ஆற்றல் குறையத் தொடங்கும் மற்றும் உடல் பலவீனமாகும் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவான விஷயம். ஆனால் வயதான காலத்திலும் தசைகள் ஆரோக்கியமாக இருக்கவும், இதயம் மற்றும் மூளை சிறப்பாக செயல்படவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். இதற்கு தினமும் காலையில் சில உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

26
ஓட்ஸ் :

ஓட்ஸ் வயதானவர்களுக்கு சிறந்த காலை உணவாக இருக்கும். ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. அது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பெரிதும் உதவுகிறது. இதனால் இதய நோய், பக்கவாதம், டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கப்படும். ஓட்ஸில் பெர்ரி வகைகள், உலர் பழங்கள், இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும்.

36
முட்டை :

முட்டையில் புரதச்சத்து, வைட்டமின் டி, வைட்டமின் பி12, அமினோ ஆசிட்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை தசைகள் சிறப்பாக செயல்படவும், மூளை ஆரோக்கியத்திற்கும், உடலை சுறுசுறுப்பாக இயங்கவும் உதவி புரியும். எனவே வயதானவர்கள் முட்டை ஆம்லெட்டுடன் முழு தானிய பிரட் டைட் டோஸ்ட் செய்து காலை உணவாக சாப்பிட்டால் நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

46
யோகர்ட் :

இதில் புரோட்டின், கால்சியம், ப்ரோபயோட்டிக்குகள் உள்ளன. அவை தசைகளை வலுப்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை சிறப்பாக செயல்படுத்தவும் உதவுகிறது. ஆகையால் சீனியர் சிட்டிசன்கள் க்ரீக் யோகர்ட்டை தயக்கமின்றி தாராளமாக காலையில் சாப்பிடலாம். ஒருவேளை நீங்கள் கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்ள விரும்பினால் குறைந்த அளவு கொழுப்பு இருக்கும் அல்லது கொழுப்பே இல்லாத யோகர்ட்டை தேர்ந்தெடுக்கவும். ஒருவேளை கொழுப்பு நிறைந்த யோகர்ட்டை தேர்ந்தெடுத்தால் அதில் சர்க்கரை சேர்க்க வேண்டாம்.

56
பழங்கள் :

ஆப்பிள், வாழைப்பழம், பெர்ரி வகைகள் ஆகியவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்துள்ளன. அவை உடல் வீக்கத்தை குறைக்க உதவும். இது தவிர மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆகவே இந்த பழங்களை காலை உணவாக சாப்பிடும்போது அதனுடன் யோகர்ட், காட்டேஜ் சீஸ், நட்ஸ் சேர்த்து சாப்பிடுவது கூடுதல் ஆரோக்கிய நன்மையை பெற உதவும்.

66
முழு தானிய பிரட் :

முழு தானிய பிரெட்டில் பல வகையான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் அவை இரத்த சர்க்கரை அளவை மெதுவாக்கும். மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து, வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை செரிமானம் சிறப்பாக செயல்படவும், இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக செயல்படவும் உதவி செய்யும். முழு தானிய பிரட்டை காலை உணவாக சாப்பிட விரும்பினால் அவற்றுடன் அவகோடா பழம் சேர்த்து சாப்பிடுவது கொழுப்பு, புரோட்டின் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கூடுதலாக பெற உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories