Natural Homemade paste for kids: அடிக்கடி பிள்ளைகளுக்கு பூச்சி பல் வருதா? அப்போ உங்க பேஸ்ட் மாத்துங்க!

Published : Nov 23, 2026, 06:14 PM IST

Natural Homemade paste for kids: அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு பூச்சிப் பல வருகிறது என்றால் நீங்களே வீட்டில் ஈஸியாக பேஸ்ட் தயார் செய்யலாம். வெறும் 7 பொருட்களை வைத்து பேஸ்ட் தயார் செய்து விடலாம்.

PREV
14
பல் சொத்தைக்கு தீர்வு

பிள்ளைகளுக்கு அடிக்கடி பல் சொத்தை ஏற்படுவதும், பலருக்கும் பற்களில் கூச்சம் மற்றும் சிறிய அசௌகரியங்கள் தோன்றுவதும் இன்றைய காலகட்டத்தில் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்குத் தீர்வாக வீட்டிலேயே எளிமையாகத் தயாரிக்கக்கூடிய இயற்கை பல் பொடியை எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த எளிய செய்முறையில் நம் சமையலறையிலும் வீட்டிலும் எளிதாகக் கிடைக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

24
தேவையான பொருட்கள்

கிராம்பு: இதில் உள்ள யூகேனல் எனப்படும் இயற்கைச் சேர்மம் வாய் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

காய்ந்த வேப்பிலை: நன்கு உலர்த்தி எடுக்கப்பட்ட வேப்பிலையில் பயோ-ஆக்டிவ் சேர்மங்களும், பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையும் இருப்பதால் வாய் சுகாதாரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள்: இதில் உள்ள குர்குமின் சேர்மம் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புத் தன்மை கொண்டதாக விளங்குகிறது. மஞ்சள் சேர்ப்பதால் பற்களில் மஞ்சள் கறை படியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தாலும், நிச்சயமாக அப்படி வராது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

34
தேவையான முக்கியப் பொருட்கள்

கல்லுப்பு அல்லது ஹிமாலய உப்பு: இதில் உள்ள சோடியம் குளோரைடு பற்களைச் சுத்தம் செய்ய உதவுகிறது.

சோம்பு: வாய்க்கு நல்ல புத்துணர்ச்சியைத் தரச் சேர்க்கப்படுகிறது.

ஓமம்: இதில் உள்ள தைமால் என்ற நறுமணக் கூறு பாரம்பரிய வாய் பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் நல்ல புத்துணர்ச்சியைத் தருகிறது.

புதினா: புதினா சுவை பிடிப்பவர்கள் உலர்ந்த புதினா இலைகள் அல்லது பெப்பர் மின்ட் எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள மென்தால் குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருகிறது.

44
படி 1

கிராம்பு, காய்ந்த வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு, சோம்பு, ஓமம், புதினா ஆகிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மென்மையான பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பொடியை ஒருமுறை சலித்து எடுத்தால், கரடுமுரடான துகள்கள் நீங்கி புத்துணர்ச்சியான, மென்மையான இயற்கைப் பல் பொடி தயார். இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்தப் பொடியை முறையாகப் பின்பற்றிப் பயன்படுத்தி, பல் பராமரிப்பில் மாற்றத்தைக் காணலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.

Read more Photos on
click me!

Recommended Stories