வெள்ளைப்படுதல் பிரச்சினை உடனே தீர பெஸ்ட் டிப்ஸ் இதோ...கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!

Published : Jan 22, 2024, 01:27 PM ISTUpdated : Jan 22, 2024, 01:38 PM IST

பெண்களுக்கு மாதவிடாய் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வெள்ளை வெளியேற்றமும் முக்கியமானது. ஆனால் அது அதிகமாக வெளியேற்றத் தொடங்கும் போது பிரச்சனை எழுகிறது. நீங்களும் தொடர்ந்து இந்த  பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள் அது நல்லது..  

PREV
17
வெள்ளைப்படுதல் பிரச்சினை உடனே தீர பெஸ்ட் டிப்ஸ் இதோ...கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!

பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளில் வெள்ளைப்படுதல் ஒன்றாகும். சில சமயங்களில் இந்தப் பிரச்சனை அதிகரித்து, அதனால் நாம் அசௌகரியமாக உணர ஆரம்பிக்கிறோம், அத்தகைய சூழ்நிலையில் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கே உள்ளன. அவை..

27

வெந்தய நீர்: பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு வெந்தய நீர் ஒரு சிறந்த தீர்வாகும். இதற்கு முதலில், வெந்தயத்தை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பாதியளவு தண்ணீர் வந்தவுடன் உடனே அதனை வடிகட்டி சிறிது ஆறிய பிறகு குடிக்கவும். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 

37

மாதுளை: மாதுளை சுவையானது மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பெண்களுக்கு வெள்ளைப்படுதலைத் தடுக்க இது பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் மாதுளையை நீங்கள் பழமாக அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம்.
 

47

வாழைப்பழம்: வெள்ளைப்படுதல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த தீர்வாகும். எனவே,  வாழைப்பழத்தை தினமும் காலை  மாலை என இருவேளையிலும் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும்.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஏற்படும் குறட்டை பிரச்சனை.. காரணங்கள் இவையே..!

57

துளசி: துளசி அற்புதமான மூலிகைகளில் ஒன்று. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நீண்ட காலமாகவே, வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வாக இதைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு நீங்கள் துளசி இலையில் ஜூஸ்செய்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். இதனை தினமும் இருமுறை குடிப்பது நல்லது.

இதையும் படிங்க:  பெண்களே! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.. அது உங்களை கொன்றுவிடும்!

67

வடித்த அரிசி நீர்: நீங்கள் அரிசி சமைத்த பிறகு, வடிக்கும் போது அந்த நீரை வீணாக்காமல் தொடர்ந்து குடித்து வந்தால், அடிக்கடி வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள். மாவுச்சத்து நிறைந்த இந்த தண்ணீர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77

கொத்தமல்லி: வெள்ளைப்படுதல் பிரச்சினையில் இருந்து விடுபட கொத்தமல்லியைப் பயன்படுத்தலாம். சில ஸ்பூன் கொத்தமல்லியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் நீங்கள் இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories