தினமும் சிக்கன் சாப்பிடுவதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?

First Published Oct 21, 2022, 4:41 PM IST

உலகளவில் அசைவ விரும்பிகள் பலரால் முதன்மையாக விரும்பப்படும் உணவு சிக்கன். பல வகையான அசைவ உணவுகள் இருப்பீனும் சிக்கன் சுவை அலாதியானது. அதேசமயத்தில் சிக்கன் சாப்பிடுவதால் பல உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுவதுண்டு. அப்படி குறிப்பிடும் போது சிக்கன் மூலம் கிடைக்கும் நன்மைகள் காணாமல் போய்விடுகிறது. உங்களிடம் யாராவது வந்து சிக்க தீமை என்று கூறினால், அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை வைத்து மொழி கூறுங்கள். 
 

எலும்பு உறுதி அடைகிறது.

சிக்கனில் அதிகப்படியான புரதம் நிறைந்துள்ளது. இதனால் எலும்புகளை பாதிக்கக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. மேலும் இது எலும்புகளை ஆரோக்கியம் பெறச் செய்கிறது. 
 

நினைவு தப்பாது

சிக்கனில் புரதம் மட்டுமின்றி மேலும் பல்வேறு  ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் முதன்மையானவை வைட்டமின் பி12 மற்றும் கோலின் ஆகியவை ஆகும். இவை இரண்டும் நமக்கு நினைவாற்றலை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளாக உள்ளன. அந்த வகையில் அதிகளவு கோலின் உள்ள கோழிக்கறியினை உட்கொள்ளக் கூடியவர்களுக்கு நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
 

எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம்

உடலில் ரத்தச் சோகை ஏற்படுவதும் மற்றும் இரும்புச் சத்து குறைவாக காணப்படுவது போன்றவை உடலுக்கு அவ்வப்போது சோர்வை அளிக்கும். இந்த பிரச்னை தீர்ந்திட, கோழிக்கறி உட்கொண்டு வருவது நன்மையை தரும். உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும். மேலும் ரத்த சோகை பிரச்னை நீங்கும். இதன்மூலம் நிம்மதியான உறக்கம் ஏற்பட்டு, உடல் சுறுசுறுப்புடன் இருக்க உதவி செய்யும்.

உணவு சாப்பிட்டதும் வெந்நீர் குடிப்பது செரிமானத்துக்கு உதவுமா?

புத்துணர்வு உண்டாகும்

நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களில் ஒன்று செரோடோன். இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கக்கூடியதாக உள்ளது. பலரும் கோழிக்கறி சாப்பிட்டால் தூக்க வரும், உடலில் சோர்வு அதிகரிக்கும் என்று கூறுவார்கள். உண்மையில் கோழிக்கறியுடன் நீங்கள் எதை சேர்த்து சாப்பிடுகிறீர்கள் என்பதால் இதுபோன்ற மனநிலை ஏற்படுகிறது. உரிய முறையில் கோழிக் கறியை சமைத்து சாப்பிடுவதால்  செரோடோன் ஹார்மோன் செயல்பட தேவையான டிரிப்டோபான் உற்பத்தி அதிகமாகி, உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

ரீஃபைண்டு எண்ணெய் உடலுக்கு நன்மையா? தீமையா?

அவித்து சாப்பிட்டால் அவ்வளவு சத்து

கோழிக்கறியை முடிந்தவரை எண்ணெய்யில் போட்டு வறுத்து எடுக்காமல், அவித்து சாப்பிட்டால் தேவையற்ற எல்.டி.எல் கொழுப்பு குறைந்துவிடுகிறது. இதனால் இருதய ஆரோக்கியம் மேம்படுகிறது. நீங்கள் உப்புப் போட்டு கோழிக்கறியை அவித்து சாப்பிடுவது உடலுக்கும் இருதயத்துக்கும் நன்மையை அதிகரிக்கும். அதேசமயத்தில் கோழிக்கறியை பொரித்து, வறுத்து சாப்பிடுவது பல்வேறு இருதய பிரச்னைகளை ஏற்படுத்தும்.
 

click me!