வாழைப்பழம் vs கொய்யா: எடை இழப்புக்கு இவை இரண்டில் எது பெஸ்ட்?!

Published : Feb 10, 2025, 03:25 PM IST

Guava vs Banana For Weight Loss :  எடை இழப்புக்கு வாழைப்பழம் அல்லது கொய்யா இவை இரண்டில் எது சரியானது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.  

PREV
16
வாழைப்பழம் vs கொய்யா: எடை இழப்புக்கு இவை இரண்டில் எது பெஸ்ட்?!
வாழைப்பழம் vs கொய்யா: எடை இழப்புக்கு இவை இரண்டில் எது பெஸ்ட்?!

தினமும் ஏதாவது ஒரு பழம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பழங்கள் சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் பல நோய்கள் தடுக்கப்படுகிறது மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும். ஆனால் உடல் எடையை குறைக்க எந்த பழத்தை தினசரி வழக்கத்தில் சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எப்போதும் பலரது மனதில் எழுகிறது. இத்தகைய சூழ்நிலையில், வாழைப்பழம் அல்லது கொய்யாப்பழம் இவை இரண்டில் எது எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். ஏனெனில், இந்த இரண்டு பழங்களும் ஆரோக்கியமானவை. இவை இரண்டும் அவற்றின் சொந்த பயன்பாடுகளுக்கு பெயர் பெற்றது. ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு பழத்திலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் வேறுபட்டவை. இப்போது எடை இழப்புக்கு கொய்யா அல்லது வாழைப்பழம் இவை இரண்டில் எது சிறந்தது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

26
கொய்யா பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகளவு உள்ளன. தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வைட்டமின் சி 2 மடங்கு வேகமாக கிடைக்கும். முக்கியமாக வாழைப்பழத்தை விட கொய்யா பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன.

36
வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவு நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தசை கட்டுப்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது. வாழைப்பழம் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீசு ஆகியவையும் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தில் கொய்யாவை விட சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக உள்ளன. அதாவது இவை குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரை ஆகும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆற்றலை விரைவாக அதிகரிக்க செய்யும்.

46
கொய்யா பழத்தின் நன்மைகள்:

கொய்யா பழத்தில் இயற்கையாகவே நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அதே நேரத்தில் இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. கொய்யாப்பழம் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க:  ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 5 ஸ்லிம் சீக்ரெட்டை டிரை பண்ணுங்க

56
வாழைப்பழத்தின் நன்மைகள்:

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதால் இது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கூடுதலாக வாழைப்பழம் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது. அதுபோல தினமும் இரவு தூங்கும் முன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் செரோடோனின் அளவு அதிகரித்து மனநிலையையும், தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும்.

இதையும் படிங்க:  என்ன செஞ்சாலும் '1' கிராம் கூட எடை குறையலயா? இந்த '5' தவறுகளை பண்ணாதீங்க!! 

66
கொய்யா அல்லது வாழைப்பழம் எது எடை இழுப்புக்கு நன்மை பயக்கும்?

கலோரிகளையையும், எடையையும் கட்டுப்படுத்த நினைத்தால் கொய்யா சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. பொதுவாக நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும் மற்றும் அதிகம் சாப்பிடுவதற்கான வாய்ப்பை குறைக்கும். சமயம் வாழைப்பழத்தில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் கொய்யாவை விட அதிக கலோரிகள் உள்ளன. எனவே ஆரோக்கியமான சிற்றுண்டிக்கு இது சிறந்த தேர்வாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories