அரிசிகள், பருப்பு வகைகள் என்று பல விதமான தானியங்களை காற்று புகாத டப்பாக்கள் அல்லது கண்டெய்னர்களில் போட்டு வைத்தால் , உலர்ந்த இடங்களில் நமக்கு சிறு வயதிலே தெரியும்.
கைகள் ஈரமாக இருக்கும் போது அரிசியை தொடக்கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறியிருப்பதை கேள்வி பட்டு இருப்போம். ஆனால் என்ன தான் முன்னெச்சரிக்கையாக இருப்பினும் சில நேரங்களில் சில பூச்சிகள் அல்லது வண்டுகள் வந்து அவற்றை கெடுக்கின்றன.
உங்களுக்கும் இந்த மாதிரியான பிரச்னைகளை எதிர் கொண்டால், அரிசி முதலான மற்ற தானியங்களை கிருமிகள் அல்லது சிறு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கபயன்படும் சில ஈஸி கிச்சன் டிப்ஸ்களை இந்த பதிவில் காணலாம்.
பிரியாணி இலைகள்:
புழுக்கள்.பூச்சிகள் மற்றும் வண்டுகளைப் போக்க உதவும் மருந்துகளில் இதுவும்.இதற்கு அரிசி வைத்துள்ள டப்பாவில் ஒரு 5அல்லது 6 பிரியாணி இலைகளை போட்டு மூடி வைக்கவும்.
இதனால் அரிசி வைத்திருக்கும் கண்டெயின்னர்களில் காற்று உட்புகாத வண்ணம் பாதுகாக்கலாம்.
பூண்டு:
அரிசி மற்றும் தானிய கண்டெயின்னர்களில் உரிக்காத பூண்டை போட்டு வைத்தால் தானியங்கள் நீண்ட நாட்கள் வரை பிரெஷ்ஷா வச்சுக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட நாளின் போது பூண்டினை சரிபார்த்து, உலர்ந்த பின் எடுத்து விட்டு புதிய பூண்டு வைக்க வேண்டும்.
கிராம்பு:
கிராம்பின் சக்தி வாய்ந்த வாசனை பூச்சிகளை எதிர்த்துப் போராட பெரிதும் துணை புரிகிறது. இதன் வாசனையால் எந்த ஒரு பூச்சி அல்லது வண்டோ அண்டாது.
பூச்சிகள் மூலம் பரவும் தொற்றுநோயைத் தடுத்து நிறுத்த கூடிய சிறந்த சமையல் பொருள் என்றே கிராம்பை கூற வேண்டும். கிச்சனில் கிருமிகள் இல்லாமல் இருப்பதற்கு கிராம்பு எண்ணெயை ஸ்ப்ரே கொண்டு தெளிக்கலாம்.
சூரிய ஒளி:
ஒரு வேளை அரிசி அல்லது மற்ற தானியங்கள் பூச்சிகள் அல்லது வண்டுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவைகளை சேலை அல்லது வேட்டிகளை விரித்து அதன் மேல் அரிசியை போட்டு பரப்பி 1 நாள் முழுதும் வைத்து ,பின் உலர்ந்த, காற்று புகாத டப்பாக்களில் போட்டு ஸ்டோர் செய்யலாம்.
சமையலறையில் நேரடியாக சூரிய ஒளி படவில்லை என்றால், ஒவ்வொரு 1- 2 மாதங்களுக்குப் பிறகு, அரிசி மற்றும் பிற தானியங்கள் மற்றும் பருப்புகளை வெயிலில் வைப்பதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.